என் அப்பாவை கிண்டல் செய்பவர்கள் யார் தெரியுமா? நடிகர் சிம்பு ஆவேசம்

இணையதளங்களில் மட்டுமல்லாது வாட்ஸப்புகளிலும் பிரபலமான ஒன்று மீம்ஸ். மீம்ஸ் க்ரியேட்டர்கள் என்று ஒரு வகையினரையே
என் அப்பாவை கிண்டல் செய்பவர்கள் யார் தெரியுமா? நடிகர் சிம்பு ஆவேசம்

இணையதளங்களில் மட்டுமல்லாது வாட்ஸப்புகளிலும் பிரபலமான ஒன்று மீம்ஸ். மீம்ஸ் க்ரியேட்டர்கள் என்று ஒரு வகையினரே உருவாகிவிட்ட அளவுக்கு மீம்ஸ் அன்றாட வாழ்க்கையில் ஒன்று கலந்துவிட்டது எனலாம். மீம்ஸ் என்றாலே காமெடி தான், யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதை நாங்கள் உருவாக்குவதில்லை என்று மீம்ஸ் தரப்பினர் கூறினாலும், சில சமயம் அவை சம்மந்தப்பட்டவரின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக அத்துமீறல்களாகவே இருந்து வருகின்றன. ஆனால் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் மீம்ஸ்கள் மக்களிடையே அதிகம் ரசிக்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. சினிமா மீம்ஸ் அரசியல் மீம்ஸ் ஆகிய இரண்டுக்கும் மவுசு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மீம்ஸ் உருவாக்குபவர்கள் அதிகமாக பயன்படுத்துவது வடிவேலுவின் முக பாவங்களைத்தான். அதற்கு அடுத்ததாக நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர். இவர் அடுக்கு மொழியில் பேசுவதையும், இசை வாத்தியங்கள் எதுவுமின்றி வாயில் ம்யூசிக் போடுவதையும் பலவிதமாக கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் சிம்பு அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது, 'என்னுடைய அப்பா பன்முகத் திறமை கொண்டவர். எல்லா வகையிலும் சிறந்தவர்.

சமீபத்தில் அவரை கிண்டல் செய்யும் விதமாக சிலர் மீம்ஸ் விடியோக்களை உருவாக்கி கலாய்த்து வருகிறார்கள். இது சரியில்லை. அவர் வாயில் இசையமைப்பதையும், தலைமுடியை விலக்குவதையும், அடுக்குமொழியில் பேசுவதையும் கிண்டல் செய்கிறவர்களால் அவர் செய்வதில் எதையாவது செய்ய முடியுமா? இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக இருக்கிறார். மேலும் அவருக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. இப்படி மீம்ஸ் எழுதி கிண்டல் செய்பவர்கள் எல்லாம் யார் தெரியுமா? எவ்வித திறமையும் இல்லாதவர்கள் தான் இப்படி செய்கிறார்கள். என் அப்பாவின் திறமையை உணர்ந்து அவரை மதிக்கிறவர்களை நானும் மதிக்கிறேன், அவரை அங்கீகரிப்பவர்களை நான் வணங்குகிறேன்’ என்று கூறியுள்ளார் சிம்பு.

முன்னதாக தன்னைக் கிண்டல் செய்வோருக்கு பதிலடி தரும் விதமாக டி.ராஜேந்தர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு சில ஆண்டுகள் முன் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டது, 'பாத்ரூமில் யார் வேண்டுமானாலும் பாடலாம் அல்லது பேசலாம். ஆனால் அதையே மேடையில் பலரால் செய்ய முடியாது. யார் வேண்டுமானாலும் மீம்ஸ் அல்லது மாம்ஸ் அல்லது பாடல்களை உருவாக்க முடியும், ஆனால் அனைவராலும் என்னைப் போல பேச முடியாது. வைரம் வைரம் தான்' என்று கூறினார்.

தந்தையைக் காக்க தனயன் களம் இறங்கியிருக்கிறார் என இதையும் ஒரு மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தயாராகிவிட்டனர் நெட்டிசன்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com