உங்களை பார்க்க நான் 26 வருடம் காத்திருந்தேன்! நெகிழச் செய்த அஜித்தின் வார்த்தைகள்!

அதிக ரசிகர்களுடைய நடிகர்களுள் ஒருவர் அஜித். ஃபேன் பாலோவர்கள் உள்ள நடிகர்கள் பலர் இருந்தாலும், அஜித்துக்கு தீவிர ரசிகர்கள் பலர் உள்ளனர்.
உங்களை பார்க்க நான் 26 வருடம் காத்திருந்தேன்! நெகிழச் செய்த அஜித்தின் வார்த்தைகள்!

அதிக ஃபேன் பாலோவர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ள நடிகர்கள் பலர் இருந்தாலும், அஜித்துக்கு அதி தீவிர ரசிகர்கள் பலர் உள்ளனர். நடிகர்கள் பலரும் கூட அஜித்துக்கு ரசிகர்கள். அந்தளவு மக்கள் மனத்தை கவர்ந்தவர் அஜித். தற்போது கோலிவுட் திரையுலகம் வேலை நிறுத்தத்தில் உள்ளதால், அஜித் நடித்துக் கொண்டிருந்த விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தை குடும்பத்தாருடன் செலவழிப்பதையும், தனக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுவதுமாகக் கழித்து வருகிறார் அஜித். தனக்கு விருப்பமான ஏரோனாட்டிக்கல் துறையில் Quadcopter பணிகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள, நேற்று (சனிக்கிழமை)  குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரிக்குச் சென்றுள்ளார் அஜித்.  

அஜித்தை சந்திப்பது அத்தனை எளிதல்ல, இந்நிலையில் அஜித்தே நேரடியாக வந்ததால் இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள் மகிழ்ந்தார்கள். இந்த விஷயம் பரவி வேறு சில மாணவர்களும் அஜித்தைக் காண ஆவலுடன், அவர் வெளியே வரும் வரை காத்திருந்தனர். அவர் வந்த பின்னர் சற்று நேரம் பேசி ஒரு செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். சச்சின் எனும் மாணவர் அஜித்திடம் மாணவர்கள் பேசிய விஷயங்களை தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். மாணவர்கள், 'உங்களைக் காண 12 மணி நேரம் இங்கேயே காத்திருந்தோம்' என்று கூற, அதற்கு அஜித் 'மன்னிச்சுக்கோப்பா, உங்களைப் பார்க்க நான் 26 வருடம் காத்திருந்தேன்’ என்று பதில் கூறினார். அஜித் நடிக்க வந்து 26 வருடங்கள் கடந்துவிட்டன. அவர்கள் வயது அதைவிடவும் கூடக் குறைவுதான். ரசிகர்களுக்காக காத்திருப்பதில் மகிழ்ச்சி எனும்படியான அஜித்தின் இந்த பதில் ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. அவர் மாணவர்களிடம் அவர் பேசிய விதமும் மரியாதையாக பழகியதும் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

மாணவர்களுள் ஒருவரான விஜய் ரசிகரை அஜித் கூறிய இந்த சொற்கள் வியப்பிலாழ்த்தியது. இந்த வியப்பை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அவரது நண்பர்கள் அதனை டேக் செய்யவே, இந்த புகைப்படமும் செய்தியும், அஜித்தின் க்யூட்டான விளக்கமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com