நான்கு நாள்களில் ரூ. 115 கோடி வசூல்: பாகுபலி 2 படம் போல வசூலில் சாதனைகள் நிகழ்த்தும் ‘அவெஞ்சர்ஸ்’!

நான்கு நாள்களில் ரூ. 115 கோடி வசூல்: பாகுபலி 2 படம் போல வசூலில் சாதனைகள் நிகழ்த்தும் ‘அவெஞ்சர்ஸ்’!

கடந்த வருடம் பாகுபலி படம் வசூலில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியதுபோல அவெஞ்சர்ஸ் படமும்...

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் கடந்த வாரம் வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் இந்தியாவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. முதல் நாளன்று இந்தப் படம் இந்தியாவில் நான்கு மொழிகளிலும் ரூ. 31.30 கோடி வசூலித்து இந்த வருடம் இந்தியாவில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது. அதேபோல இந்தியாவில் முதல் நாளன்று அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் என்கிற பெருமையையும் அவெஞ்சர்ஸ்
தட்டிச்சென்றுள்ளது.

2018-ல் இந்தியாவில் வெளியான படங்களில் முதல் நாளன்று அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமை பாகி 2 வசம் இருந்தது. அந்தப் படம் முதல் நாளன்று ரூ. 25.10 கோடி வசூலித்தது. மூன்று மொழிகளில் வெளியான பத்மாவத், முதல் நாளன்று ரூ. 24 கோடி வசூலித்தது.

இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான அவெஞ்சர்ஸ், 4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியது. நான்கு நாள்களிலும் ஒட்டுமொத்தமாக ரூ. 147 கோடி வசூலித்துள்ளது. வரிகள் நீங்கலாக ரூ. 115 கோடி வசூல். 

அவெஞ்சர்ஸ் - இந்திய வசூல் = ரூ. 114.82 (வரிகள் நீங்கலாக) 

முதல் நாள் - ரூ. 31.30 கோடி
2-வது நாள் - ரூ. 30.50 கோடி
3-வது நாள் - ரூ. 32.50 கோடி
4-வது நாள் - ரூ. 20.52 கோடி

கடந்த வருடம் பாகுபலி படம் வசூலில் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியதுபோல அவெஞ்சர்ஸ் படமும் இந்தியாவில் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிக வசூல் கண்ட ஹாலிவுட் படம் என்கிற பெருமை தற்போது, தி ஜங்கிள் புக் படம் வசம் உள்ளது. அச்சாதனையை அவெஞ்சர்ஸ் மிக எளிதாகத் தாண்டி இந்தியாவில் அதிக வசூலை அடைந்த ஹாலிவுட் படம் என்கிற சாதனையை நிச்சயம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com