பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள்: இயக்குநர் பா. இரஞ்சித் பேச்சு!

தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையம் என்றொரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திரைத்துறையிலுள்ள பல்வேறு...
பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள்: இயக்குநர் பா. இரஞ்சித் பேச்சு!

தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையம் என்றொரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திரைத்துறையிலுள்ள பல்வேறு பிரச்னைகளிலிருந்து பெண்களைக் காக்கவும் ஆண்களுக்கு நிகராக தகுந்த சம்பளம் பெற வழிவகை செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையம். இந்த அமைப்பின் தலைவர் வைசாலி சுப்பிரமணியன்.

தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பா. இரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, அதிதி மேனன், ரோகிணி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்ரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, ப்ரேம், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியதாவது: 

பெண்களுக்காகப் பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். ஒதுக்குதலில் சாதி, மதம்னு பல்வேறு பிரிவு இருப்பதைப் போல் பெண்கள் மீதான ஒதுக்குதல் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவமாக இயல்பாக இன்று வரையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள். அவர்களின் வெளிப்பாடாகத்தான் இந்தச் சங்கத்தை நான் பார்க்கிறேன். இந்தச் சங்கம் நிச்சயமா ரொம்ப வீரியமா செயல்படணும். ஏன்னா பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் போன்ற அநியாயங்களைத் தடுக்கவேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணைப் பற்றி வந்த விமரிசனம் என்னவென்றால் அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்றார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கிறதா இல்லை, அதன் நடத்தை காரணமாக இருக்கிறதா? பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணம் என்று சொல்வது மிகவும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வடிவமாகிவிட்டது. இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்தை உடைக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆள்களாக நாம் மாற வேண்டும். அதற்கு இந்தச் சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.

நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும்தான் பெற முடியும். நமக்கு வருகிற பிரச்னையை இன்னொருவரிடம் சொல்வதே முட்டாள்தனம். உனக்குப் பசித்தால்தான் நீதான் சாப்பிடவேண்டும். பிரச்னைகளைத் தீர்க்கும் சங்கமாக இது இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com