தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

மதுக்கடைகளை ஒவ்வொரு தெருவிலும் அமைக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில்...
தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம்: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு (நீட்) மையங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதியாக தெரிவித்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ட்விட்டரில் அவர் கூறியதாவது: மதுக்கடைகளை ஒவ்வொரு தெருவிலும் அமைக்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்களை அமைக்கமுடியவில்லையா? அட்டூழியங்கள் புதுவிதமாக உள்ளன. இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஆனால் நீட்டைத் தடை செய் என்பதிலிருந்து நீட்டைத் தமிழ்நாட்டில் நடத்து என்று மாறியுள்ளது. என்ன ஒரு விளையாட்டு. நம்முடைய குரல்களுக்கு உண்மையிலேயே மதிப்புள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com