ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் வாழ்த்து!

ஐஸ்வர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் வலைத்தளத்தில் பதிவு செய்து ஐஸ்வர்யாவுக்குத் தனது வாழ்த்துகளை...
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிரபல கிரிக்கெட் பயிற்சியாளர் வாழ்த்து!

தன் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் கனா படத்தைத் தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், இசை - திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு - ஆண்டனி எல். ரூபன்.

இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் பிரபல கிரிக்கெட் பயிற்சியாளருமான டேவ் வாட்மோர், கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கனா படத்துக்கான கிரிக்கெட் பயிற்சியின்போது கேரள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தற்போது உள்ள டேவ் வாட்மோரைச் சந்தித்துள்ளார் ஐஸ்வர்யா. இதையடுத்து ஐஸ்வர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் வலைத்தளத்தில் பதிவு செய்து ஐஸ்வர்யாவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் வாட்மோர். மேலும் கனா படத்தை பார்க்கவுள்ளதாகவும் அவர் அப்படத்தின் மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளின் பயிற்சியாளராக வாட்மோர் பணியாற்றியுள்ளார். வாட்மோர் பயிற்சியாளராக இருந்தபோது 1996-ல் இலங்கை அணி, உலகக் கோப்பையை வென்றது

கனா, செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திர, லக்‌ஷ்மி ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com