8 நாள்களில் ரூ. 140 கோடி மட்டுமே வசூலித்து ஏமாற்றமளித்த அமீர் கான் படம்

படம் வெளிவந்த நாள் முதல் இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களே அமைந்துள்ளன...
8 நாள்களில் ரூ. 140 கோடி மட்டுமே வசூலித்து ஏமாற்றமளித்த அமீர் கான் படம்

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 8 அன்று வெளியானது.

படம் வெளிவந்த நாள் முதல் இந்தப் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களே அமைந்துள்ளன. மிகவும் எதிர்பார்த்த இந்த அமீர் கான் படம் ஏமாற்றியுள்ளதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவு எழுதியுள்ளார்கள். இதனால் இந்தப் படத்துக்கு முதல் நாள் மட்டுமே நல்ல வசூல் கிடைத்தது. 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், முதல் நாளன்று ஹிந்திப் பதிப்பில் மட்டும் இந்திய அளவில்ரூ. 51 கோடி வசூலை அடைந்தது. ஆனால் அடுத்த நாளே இதன் வசூல் ரூ. 28 கோடியாகக் குறைந்தது.

இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் எதிர்மறை விமரிசனங்களால் நாளுக்கு நாள் வசூலில் அதிகப் பாதிப்பை அடைந்தது. முதல் 8 நாள்களில் ரூ. 135 கோடி வசூலையே அடைந்துள்ளது. மூன்று மொழிகளிலும் சேர்த்து ரூ. 140 கோடி கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கில் முதல் 8 நாள்களில் ரூ. 5.45 கோடி வசூலே கிடைத்துள்ளது. இத்தகவல்களை திரைப்படச் செய்தியாளர் தாரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் கடைசியில் ரூ. 150 கோடி மட்டுமே வசூலிக்கும் என்கிற நிலையை அடைந்துள்ளது. அமீர் கான் நடித்த பிகே மற்றும் டங்கல் ஆகிய படங்கள் முதல் 8 நாள்களில் (வரி நீங்கலாக) ரூ. 200 கோடி வசூலித்துச் சாதனை செய்தன. இதனுடன் ஒப்பிட்டால் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், வசூல் அளவில் அமீர் கானுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com