கோ- ஆப்டெக்ஸ் கைத்தறிச் சுற்றுலாவுக்கு டிசம்பர் 10 க்குள் விண்ணப்பிக்கலாம்!

இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில் கலந்துகொள்ள விரும்புவோர் கைத்தறி குழுமத்தின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.பழனிச்சாமிக்கு 94449 53739 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் தங்களது பெயரை டிசம்பர் 10-ஆம் தேதி..
கோ- ஆப்டெக்ஸ் கைத்தறிச் சுற்றுலாவுக்கு டிசம்பர் 10 க்குள் விண்ணப்பிக்கலாம்!

இன்றைய இளைய தலைமுறையினருக்கு கைத்தறியின் அருமைகளை தெரியச் செய்வதோடு; அசலுக்கும், போலி கைத்தறிக்கும் இடையிலான வித்யாசங்களைக் கண்டுணரவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் கோ-ஆப்டெக்ஸ் முன்னெடுக்கும் இம்மாதிரியான கைத்தறிச் சுற்றுலாக்கள் வரவேற்கத் தக்கவை. புடவைகள் உருவாக்கப் படும் இடத்திற்கே நேரில் சென்று காண்பது ஒரு வித்யாசமான பயணமாக இருப்பதோடு பயனுள்ள பயணமாகவும் இருக்கும்.

மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்கு கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வு சுற்றுலாவுக்கு செல்ல விரும்பும் இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் வரும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் கைத்தறி நெசவு- நெசவாளர்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களை தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி உற்பத்தி இடங்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்ல கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
முதல் கட்டமாக 20 வாடிக்கையாளர்கள் உலகப் புகழ் வாய்ந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் இல்லங்களுக்கு நவம்பர் 26-ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மதுரை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் பகுதியில் உற்பத்தியாகும் கோடம்பாக்கம் சேலைகள், தேவேந்திரா சேலைகள், சுங்குடி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரும் டிசம்பர் 17 அன்று அழைத்துச் செல்ல கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில் கலந்துகொள்ள விரும்புவோர் கைத்தறி குழுமத்தின் உதவிப் பொதுமேலாளர் எஸ்.பழனிச்சாமிக்கு 94449 53739 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் தங்களது பெயரை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இதற்கான கட்டணமான ரூ.750-ஐ வரைவோலையாக கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com