மாமல்லபுரத்தைக் கொண்டாடுவோம்!

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பில் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘பல்லவ மல்லை’ எனும் தலைப்பில் பேச்சுக் கச்சேரி, வரும் டிசம்பர் 24 (சனிக்கிழமை) மற்றூம் டிசம்பர் 25 (ஞாயிற்றுக்  கிழமை)
மாமல்லபுரத்தைக் கொண்டாடுவோம்!

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பில் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘பல்லவ மல்லை’ எனும் தலைப்பில் பேச்சுக் கச்சேரி, வரும் டிசம்பர் 24 (சனிக்கிழமை) மற்றூம் டிசம்பர் 25 (ஞாயிற்றுக் கிழமை) இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

சென்னையின் டிசம்பர் மாத சங்கீதக் கச்சேரியைப் போல் தொடர் பேச்சுக்கச்சேரியாக நடைபெறும் இந்நிகழ்வில், மாமல்லபுரத்தின் வரலாறு, கலைச்சிறப்பு, பல்லவர் கால கல்வெட்டுகள்,, மல்லையின் இலக்கியச் சிறப்பு குறித்து பல்வேறு தலைப்பில் உரைகள் இடம் பெறுகின்றன.

மாமல்லபுரம் நாம் பள்ளிக்காலம் தொட்டே அறிந்த இடம் தான் என்றாலும் இந்த நிகழ்வின் மூலமாக நாம் மல்லையின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்கிறார் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் நிறுவனரும், ‘மாமல்லபுரம்’ புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்.

பேச்சுக் கச்சேரியின் ஒரு பகுதியாக, முனைவர் ஸ்வர்ணமால்யா கணேஷின் நாட்டிய நாடகம் இடம்பெறுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னனான, முதலாம் மகேந்திர வர்மனின் ‘மத்த விலாசம்’ எனும் நூலைத் தழுவி இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப் பட்டிருக்கிறதாம். இந்த கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை (http://tamilheritage.in) குறித்து...

தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் குறித்த பரவலான புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் அமைப்பு இது. இவ்வமைப்பு ஆண்டு தோறும் கலை உலாவை ஏற்பாடு செய்து நடத்தி வருவதோடு வரலாற்று ஆய்வாலர்கள், கலாச்சார வித்தகர்களின் சிறப்புப் பேச்சுகளையும் மாதம் தோறும் நடத்தி வருகிறது.

நிகழ்ச்சி நிரல்:

24.12.2016 - சனிக்கிழமை

காலை 10.00 மணி: அத்யந்தகாமனின் அடிச்சுவட்டில் - முனைவர் சித்ரா மாதவன்
பல்லவச் சிற்பங்கள் ஒரு பார்வை

காலை 11.45 மணி: சிற்பம் சிவம் சுந்தரம் - பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்
மாமல்லைச் சிற்பங்களின் உடல்மொழி

மதியம் 2.00 மணி: புலவன் அத்யந்தகாமன் - முனைவர் சங்கர நாராயணன்
கலைக்கடலின் இலக்கிய நயம்

மதியம் 3.45 மணி: சங்கம் முதல் சமீபம் வரை - திரு கோபு ரங்கரத்தினம்
மல்லை வரலாற்றை ஆய்வாளர்கள் துப்பறிந்த கதை

மாலை 5.30 மணி: மத்தவிலாசப் பிரஹசனம் - முனைவர் ஸ்வர்ணமால்யா
விசித்திர சித்தனின் விநோத காவியம் - நாட்டிய நாடகம்

25.12.2016 - ஞாயிற்றுக் கிழமை

காலை 10.00 மணி: கொற்கை நன்றே - முனைவர் எஸ் பாலுசாமி
மல்லையில் மகிஷாசுரமர்த்தினியின் கோல வடிவங்கள்

காலை 11.45 மணி: நவிலும் சிற்பத்தில் நான்கானவன் - பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்

ரசிகர் அகப்பொருள் - கலை ஆர்வலரின் கருத்துக் கோவைz

மதியம் 2.00 மணி: தமிழில் நனைந்த கலை - பேராசிரியர் மதுசூதனன்
ஆழ்வார்களின் கடல்மல்லைப் பாசுரங்கள்

மதியம் 2.45 மணி: மல்லையின் தமிழ்க் கல்வெட்டுகள் - திரு கே.ஸ்ரீதரன்
பின் தொடர்ந்த மன்னர்களின் குரல்

மதியம் 3.45 மணி: ஐம்பதாண்டு கால மல்லை ஆய்வுகள் - முனைவர் நாகசாமி
யார் அந்த அத்யந்தகாமன் - புத்தொளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com