ஜப்பானியர்களைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

நம் இந்தியா செழுமையான பாரம்பரியத்திற்கும் கலாசாரத்துக்கும் பெயர் பெற்ற நாடு.
ஜப்பானியர்களைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!

நீண்ட பாரம்பரியத்திற்கும், கலாசாரத்துக்கும் புகழ்ப் பெற்ற நாடு. நமது இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இயல்புடையவர்கள் இந்தியர்கள் என உலகெங்கிலும் அறியப்படுகிறோம்.

ஆனால் நாம் ஜப்பானியர்களைப் பார்த்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். 

1. ஜப்பானில் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு

உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் டோக்கியோ  ஒன்றாகும்.

ஆனால் இங்கு வீடற்ற மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் உள்ளது என்பது ஆச்சரியமான உண்மை.

கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரில், 1700 நபர்கள்தான் வீடில்லாதவர்கள். ஜப்பானிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது.

2. ஜப்பானில் குழந்தைகள் தனியாக பயணம் செய்வார்கள்

ஜப்பானில் 6 அல்லது 7 வயது  குழந்தைகள் கூட ரயில் அல்லது பேருந்தில் தனியாக பள்ளிக்கு செல்வார்கள்.

தங்களுக்குத் தேவையான பொருட்களை கடைகளுக்குச் சென்று தாமாக வாங்கிக் கொள்வார்கள். காரணம் இங்கு குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் குற்ற விகிதம் குறைவு.

இளம் வயதினரைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வு அந்தச் சமூகத்துக்கு உள்ளதால் இது சாத்தியமாகிறது.

3. உயர்ந்த பண்புகளை பள்ளியிலிருந்தே கற்றுக் கொள்ளும் ஜப்பானிய மாணவர்கள்

மாணவர்கள் தங்கள் பள்ளிகளை சுத்தமாகப் பராமரிக்கும் பணிகள் முன் வந்து செய்வார்கள். மாடிப் படிகள் உள்ளிட்ட பள்ளி வளாகம் முழுவதையும் பெறுக்கி, மாப் போட்டு துடைப்பார்கள்.

மேலும் கழிப்பறைகளைக் கூட சுத்தம் செய்கிறார்கள்.

இது அவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வைத் தருவதுடன், ஒழுக்கம், பொறுப்பு மற்றும் குழுப்பணி ஆகியவற்றையும் கற்றுக் கொடுக்கிறது.

4. பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு

ஜப்பானிய குழந்தைகள் பள்ளிகளில் தங்களுடைய மதிய உணவைத் தாமே எடுத்து சாப்பிடுவார்கள்.

ஆயா அல்லது டீச்சர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகளை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்து தருவார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் சாப்பாட்டு அறையை சுத்தம் செய்துவிடுவார்கள்.

5. நேரம் தவறாமை - ரயில் தாமதத்திற்கான சான்றிதழ்

ஜப்பானியர்கள் நேரத்தை மதிப்பவர்கள். 5 நிமிடம் ஒரு ரயில் தாமதமாக வந்துவிட்டாலும் கூட, அலுவலகங்களில் அந்தத் தாமதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ரயில் உண்மையில் தாமதமாக வந்தது என்ற சான்றிதழை அந்த ஊழியர் தந்தால்தான் தாமததிற்கான காரணம் ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு ரயில்வே ஊழியர் இந்தத் தாமதப் பத்திரத்தை விநியோகிப்பார்கள்.  

6. பேரிடர் மேலாண்மை

ஜப்பானில் அடிக்கடி பூகம்பம் மற்றும் கடும் மழையால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்படும்.

ஆனால் பெருமளவில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிக்குப் பின்னரும் ஒரே வாரத்திற்குள் சாலைகள் சீர் அமைக்கப்பட்டுவிடும்.

டோக்கியோவில் பெரிய வெள்ளம் வந்தாலும் சாலைகளில் நீர் தேங்காது. காரணம் மிகச் சிறந்த மழை நீர் சேமிப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.  

7. காணாமல் போன பொருட்கள் விரைவில் திரும்ப கிடைக்கும்

ஜப்பானில் நீங்கள் ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால் கவலையே படவேண்டாம். அது பத்திரமாக உங்களிடம் திருப்பித் தரப்படம். விலை அதிகமான செல்ஃபோன், பர்ஸ், குடை என எதைத் தொலைத்தாலும் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று ஒரு புகார் அளித்தால் போதும்.

தொலைந்ததும் திரும்பக் கிடைத்ததும் என்ற தனிப்பிரிவே அங்கு உள்ளது. யாரோ தொலைத்த பொருள் எனக் கடந்து போகாமல் ஜப்பானியர்கள் பொறுப்பாக அந்தப் பொருளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் சேர்ப்பார்கள்.

டோக்யோவில் 32 மில்லியன் டாலர்களை இப்படி திரும்பக் கிடைத்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com