வீக் எண்ட் வந்தாச்சு....கொஞ்சம் சிரிங்க பாஸ்!

ஒரு சிறுவன் தனது செல்ஃபோனில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். 
வீக் எண்ட் வந்தாச்சு....கொஞ்சம் சிரிங்க பாஸ்!

ராக்கி தனது செல்ஃபோனை சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். 

ராக்கி : அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?

கடைக்காரர் : 6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி...

ராக்கி : அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்கண்ணா!

***

மணி : என்னுடைய மொபைல் பில் எவ்வளவுங்க?

கடைக்காரர் : சார், உங்க போன்ல *123  டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்ளோன்னு
தெரிஞ்சுடும்

மணி : என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றிங்களே!

***

பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார் தெரியுமா?

செல்போன் ரீ-சார்ஜ் கார்டை தனியா சுரண்டிகிட்டு இருக்கார்...

***

இந்த உலகமே இப்படித்தாண்டா?

எப்படிடா?

ஃபோன் கீழே விழுந்தா டென்ஷனா ஆகறான்...ப்ரெண்ட் கீழே விழுந்தா சிரிக்கறான்...

***

நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!

***

ஆபரேஷன் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் அவர் போலி டாக்டர்னு தெரிஞ்சுதுடா

எப்படி?

தையல் போடறதுக்கு சாதாரண நூல் யூஸ் பண்ணட்டா மாஞ்சா நூல் போடலாமான்னு கேட்டாரே!

கார்டூன் நன்றி - அபிஜித் பாதூரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com