இயற்கை வளங்களைப் படம்பிடிப்பதில் முன்னிலை வகிக்கும் கார்டோசாட் !

விண்வெளியில் இருந்து பூமிப் பரப்பில் இருக்கும் இயற்கை வளங்களைப் படம் பிடிப்பதில் உலகளவில் இஸ்ரோ அனுப்பிய கார்டோசாட் வரிசை செயற்கைக்கோள்கள் முன்னணியில் இருக்கின்றன.
இயற்கை வளங்களைப் படம்பிடிப்பதில் முன்னிலை வகிக்கும் கார்டோசாட் !

விண்வெளியில் இருந்து பூமிப் பரப்பில் இருக்கும் இயற்கை வளங்களைப் படம் பிடிப்பதில் உலகளவில் இஸ்ரோ அனுப்பிய கார்டோசாட் வரிசை செயற்கைக்கோள்கள் முன்னணியில் இருக்கின்றன.
இத்தொலையுணர்வு செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் சவால்விடும் வகையில் முன்னேறியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதே கார்டோசாட் வரிசையில், இப்போது ஜூன் 23-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் மூலமாக கார்டோசாட் 2-இ செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படவுள்ளது.
கார்டோசாட் 2 இ சிறப்புகள்: இந்தச் செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டது. பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் எடுக்க உதவும் மல்டிஸ்பெக்ட்ரல் கேமராக்கள் (Multispectral Camera) அதில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள்.
கிராமம், நகரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் அதன் பண்பாடுகளைத் துல்லியமாகப் படம் எடுத்து அனுப்பும். இதன் மூலம் நம்மால் நில அளவைக்கான வரைபடம், நீர் மேலாண்மைக்கான படங்களைத் தயாரித்துக்கொள்ள முடியும்.
கார்டோசாட் 1: 2005 மே 5-ஆம் தேதி ஏவப்பட்ட கார்டோசாட் வரிசையின் முதல் செயற்கைக்கோள். இந்தச் செயற்கைக்கோள் வழங்கும் புகைப்படங்கள் உலகளாவிய பங்கீட்டுக்கு ஏதுவாக அமெரிக்காவிலுள்ள சுற்றுப்பாதையைப் படமாக்கும் நிறுவனமான சியோஐ-இல் கிடைக்கிறது. 
ஒட்டுமொத்த பூமியையும் 126 நாள் சுழற்சியில் 1867 சுற்றுப்பாதைகளில் இச்செயற்கைக்கோள் படம்பிடித்து முடிக்கிறது. 
புவிப்பகுதியை இக்கருவிகள் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுத்து வருகின்றன. இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை எடுக்கும் திறன் கொண்டவை. இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள் காலம் முடிந்துவிட்டது. 
கார்டோசாட் -2: 2007 ஜனவரி 10-ஆம் தேதி இந்தச் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கார்டோசாட்-2 செயற்கைக்கோளில் பூமியின் சுற்றுப்பாதையைப் படம் பிடிக்க உயர்தொழில் நுட்பக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்தக் கேமராக்கள் 9.6 கி.மீ அகலத்தில் படம் பிடிக்கும் தன்மை கொண்டவை. கார்டோசாட்- 2 செயற்கைக்கோளை 45 டிகிரி அளவில் பூமியை நோக்கியும், அதே போல் அதன் சுற்றுப்பாதையை நோக்கித் திருப்பவும் முடியும். 
ஒரு குறிப்பிட்ட காட்சிப் புள்ளியை ஒளிப்படத் தொகுதிகளாகத் தரும் அளவிற்கு மேம்பட்ட ஒரு தொலையுணர்வு செயற்கைக் கோள். இந்த செயற்கைக்கோளின் புகைப்படங்களை, விவரமான வரைபடங்கள் தயாரித்தல், பிற நிலப்பட வரைவியல் பணிகளில் ஈடுபடுதல், கிராமப் புற மற்றும் நகர கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற செயல்களுக்கு புவியியல் மற்றும் நில விவர அமைப்புகள் பயன்படுத்துகின்றன.
கார்டோசாட் 2 ஏ: 2008 ஏப்ரல் 28-ஆம் தேதி இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள். இக்கால கட்டத்தில் இந்திய விமானப் படை வான்பாதுகாப்புக்காக புதிய படையமைப்பை அமைத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
கார்டோசாட்-2பி: 2010 ஜூலை 12-ஆம் தேதி சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இச்செயற்கைக்கோளில் நவீன புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இக்கருவி கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களை எடுக்கக் கூடியதாக இருந்தது. கார்டோசாட்- 2பி செயற்கைக்கோள் பூமியின் அனைத்து திசையிலும் திரும்பிப் படமெடுக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது. 
கார்டோசாட்- 2சி: 2016 ஜூன் 22-ஆம் ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கார்டோசாட்- 2சி செயற்கைக்கோள் உதவியால் நீர்வள மேம்பாடு, காடுகள் பாதுகாப்பு மற்றும் பெருநகரக் குடியிருப்புகளை செம்மைப்படுத்துதல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். கார்டோசாட்-2சி- இன் செயல்பாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொழில்நுட்பத்தை விட மிகச்சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மின்காந்த நிறாலையில் செயல்படும் வகையில் சிறப்புக் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.
வினாடி நேரத்தில் பூமியின் எந்த பகுதியையும் மிகவும் தெளிவாகப் படம் பிடித்துத் தள்ளும் சிறப்பு மிக்கது. முக்கியமான பகுதிகளை விடியோவாகவும், நீண்ட புகைப்படமாகவும் எடுக்கும் திறன்படைத்தது. பூமியில் 0.65 மீட்டர் பகுதியையும் 0.8 மீ தெளிவுடன் உயர் தொழில்நுட்பத்தில் படம் பிடித்து அனுப்பும்.
கார்டோசாட் 2டி: இந்தாண்டு பிப்ரவரி மாதம் கார்டோசாட் 2 டி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. கார்டோசாட் 2 செயற்கை கோள், பூமியைப் படமெடுக்கவும், கடல் வழி போக்குவரத்தைக் கண்காணிக்கவும், நீர்வள மேம்பாட்டுக்கும், காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் உதவும். இந்தச் செய்றைக்கோள் இப்போது பூமியை படம் எடுக்கும் வேலையைத் தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் வரும் 23-ஆம் தேதி கார்டோசாட்- 2 இ செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது.

அமெரிக்கா அனுப்பும் 10 நானோ செயற்கைக் கோள்கள்!

பிஎஸ்எல்வி சி38 ராக்கெட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 29 நானோ செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து மட்டும் 10 செயற்கைக்கோள்களும், இங்கிலாந்தில் இருந்து 3, பெல்ஜியத்தில் இருந்து 3, இத்தாலியில் இருந்து 3 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளன.
ஆஸ்திரியா பெகாசஸ் ஏடி03
பெல்ஜியம் கியூபி50 பிஇ06, இன்பிளேட் செயில், யூசிஎல்சாட் (3)
சிலி சூசேய் 1
செக் குடியரசு விùஸட்யூசாட் 1
பின்லாந்து ஆல்டோ 1
பிராஃன்ஸ் ரோபுஸ்டா 1பி
ஜெர்மனி கியூபி50 டிஇ04
இதாலி உர்சாமாய் ஓஆர், டி-சாட், மாக்ஸ் வேலியர் (3)
ஜப்பான் சிஇ சாட்1
லாத்வியா வென்டா 1
லிதுவானியா லித்வான்சியா சாட்2
ஸ்லோவாகியா எஸ்கே கியூப் 
இங்கிலாந்து 3 டைமன்ட்ஸ்
அமெரிக்கா சிசேரோ 6, டைவாக் 53பி, லெமூர் 2 (10).

தமிழகத்தின் நானோ செயற்கைக்கோள்!

பிஎஸ்எல்வி சி38 ராக்கெட் ஜூன் 23-ஆம் தேதி 30 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்ல உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து 29 செயற்கைக்கோளும், இந்தியாவில் இருந்து ஒரு நானோ செயற்கைக்கோளும் ஏவப்படவுள்ளன.
இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் ஒரு நானோ செயற்கைக்கோளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.
"நியூசாட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நானோ செயற்கைக்கோள் விவசாயப் பயிர்கள் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவிபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளில் 40 வாட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆர்ஜிபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தச் செயற்கைக்கோள் மூலம் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கான படங்களை எடுத்து அனுப்ப முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com