ஜெயலலிதா பாணியில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஜெயலலிதா பாணியில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமியின் அறிவிப்புகள்


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  எண்.110-ன் கீழ்  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிக்கை – 29.6.2017

எரிசக்தித் துறை
தடையற்ற மின்சாரம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு மின்  திட்டப் பணிகள் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா எடுத்த சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக  திகழ்கிறது. அனைவரும் தரமான மின்சாரம் பெறும் வகையில், துணை மின் நிலையங்கள், மின் பாதைகள், மின் மாற்றிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 2008-ஆம் ஆண்டு அமலில் இருந்த மின்கட்டுப்பாட்டு முறைகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அயராத முயற்சியினால் 5.6.2015 முதல் முழுவதுமாக நீக்கப்பட்டு அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள கணக்கீட்டின்படி 100 யூனிட் வரையிலான மின்சாரம் கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் மின்வாரியத்தால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் 

1. நாகை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும்.
2. சென்னை மாநகரிலுள்ள கோயம்பேட்டில் 1,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வோல்ட் எரிவாயு காப்பிடப்பட்ட (GIS) துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும்.
3. தற்போது 230 கிலோ வோல்ட்டாக இருக்கின்ற தரமணி துணை மின் நிலையம் 710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 கிலோ வோல்ட் எரிவாயு காப்பிடப்பட்ட (GIS) துணை மின் நிலையமாக தரம் உயர்த்தப்படும் .
4. இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில், நரிப்பையூர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களை உள்ளடக்கி 500 மெகாவாட் மிக உய்ய சூரியசக்தி  மின்னழுத்த பூங்கா ((Ultra Mega Solar Photovoltaic Power Park) 2,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மானக் கழகத்தால் பொறியியல்- கொள்முதல்-கட்டுமானம் (EPC) அடிப்படையில் அமைக்கப்பட்டு இயக்கப்படும்.
5. சென்னை பெருநகரின் மின்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, கூடுதலாக 31 புதிய துணை மின் நிலையங்கள், இயக்கத்தில் உள்ள 314 உயரழுத்த மின்மாற்றிகளை திறன் உயர்த்தும் பணிகள், புதிய 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகள் நிறுவும் பணிகள் மற்றும் இயக்கத்தில் உள்ள 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகளை வலுப்படுத்தும் பணிகள் ஆகியன 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
6. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் நான்கு, 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் நாற்பத்தி நான்கு, 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 80 ஆக மொத்தம் 128 துணை மின் நிலையங்கள் 1,347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
7. தமிழ்நாடு எரிசக்தி  மேம்பாட்டு முகமை, எரிசக்தி திறன் சேவை லிமிடெட் (EESL) உடன் புரியதுணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதனால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு 11,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் மாநிலத்தில் பயனுள்ள ஆற்றல் செய்திறன் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உயர்த்திடவும் மற்றும் புதைபடிவ எரிபொருள் நுகர்வினை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

* * * * * 

தொழில் துறை

இந்தியாவில் தொழில் துவங்க தேவையான உகந்த சூழ்நிலையும், சிறப்பான  திறன் வாய்ந்த மனித வளத்தினையும், 24 மணி நேரம் கிடைக்கின்ற தரமான மின்சாரம், சுமுகமாக தொழில் தொடங்கி நடத்துவதற்கு அனைத்து சூழ்நிலைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்நாடு. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கையிலும், தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. புதிய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் பதிவு செய்வதிலும் தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்குகிறது. தொழில் துறையில் நிகர மதிப்புக் கூட்டல் படி தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் மொத்த வருவாய் மதிப்பிலும், மொத்த ஏற்றுமதியிலும் மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறுவதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது.

ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசின் சார்பாக, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியினை மேலும் மேம்படுத்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1.  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், புழு வாக்கம் மற்றும் வாயலூர் கிராமங்களில் உள்ள சுமார் 360 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையக் குழுவுடன் இணையது ஒரு பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா (Multi Modal Logistics Park)  1,295 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவை அமைப்பதால் போக்குவரத்து செலவுகள், வாகனங்களினால் ஏற்படும் மாசு மற்றும் சாலை நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. இத் ட்டம் பொன்னேரி தொழில் முனைய (Node) மேம்பாட்டுத் தி ட்டத்தின் கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.
2. தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்.45B-ன் புறவழிச் சாலையையொட்டி, 1,032 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தூத்துக்குடி தொழில் வளாகம் நிலை-I உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அப்பகுதிதியில் காணப்படும் தொழில் மனைகளுக்கான தேவையை கருத்தில் கொண்டும், கடல்வழி, வான்வழி மற்றும் இரயில் வழிப் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டும் சிப்காட் தொழில் வளாகம் நிலை-II ஒட்டி, ஒட்டப்பிடாரம் வட்டத்தில், தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் மீளவிட்டான் கிராமங்களில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தூத்துக்குடி தொழில் வளாகம் - நிலை II உருவாக்கப்படும். இவ்வளாகத்தினை மேம்படுத்தும் பொருட்டு, முதலாவதாக 600 ஏக்கர் பரப்பளவுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள், மழைநீர் வடிகால், சாலையோர மரங்கள், தெரு விளக்குகள் மற்றும் பிற வச கள் 60 கோடி ரூபாய் செலவில், இரண்டு வருட காலத்திற்குள் உருவாக்கப்படும். இதன் மூலம் 500 கோடி ரூபாய் முதலீடும், 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், 20 ஆயிரம் நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும்.

* * * * *
 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
ஜெயலலிதா அவர்கள் காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசின் சார்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கீழ்க்காணும் திதிட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.
1. தமிழ்நாட்டில் அனைத்து வசதியுடன் தொழிற்பேட்டைகளை தொடங்குவது மற்றும் அதை திறம்பட நிர்வகிப்பது தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முக்கியமான செயல்பாடுகளாகும்.

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம், 
அ) வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், முள்ளுவாடி மற்றும் நாகலேரி கிராமங்களில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 4 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

ஆ)  திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், ஏனம்பாக்கம் கிராமத் ல் 216.37 ஏக்கர் நிலப்பரப்பில் 58 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

இ)  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகோளாபாடி மற்றும் கண்ணக்குருக்கை கிராமங்களில் 57.18 ஏக்கர் நிலப்பரப்பில் 13 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மூன்று தொழிற்பேட்டைகள் நடப்பாண்டில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் குறு நிறுவனங்களின் எண்ணிக்கை 6.92 இலட்சம் ஆகும். ஈரோடு மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம், 6 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 20 சேமிப்பு கிடங்குகள், நிர்வாக அலுவலகம், காட்சி மையம், பேச்சுவார்த்தை அரங்கம் ஆகியவை அமைக்கும். இதன் மூலம் 700 குறுந்தொழில்கள் பயன்பெறும்.

காக்களூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் 4 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி மையம், சந்தை மற்றும் காட்சி மையம், பேச்சுவார்த்தை அரங்கம் ஆகியவை அமைக்கும். இதன் மூலம் 120 குறுந்தொழில்கள் பயன்பெறும்.

 திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை சங்கம் ( பகுதிதி-I), 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும். இதன் மூலம் 60 குறுந்தொழில்கள் பயன்பெறும்.

 திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை சங்கம் (பகுதி_II), 5 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி மையம், சந்தை மற்றும் காட்சி மையம், பொது கிடங்கு, பேச்சுவார்த்தை அரங்கம் ஆகியவை அமைக்கும். இதன் மூலம் 100 குறுந்தொழில்கள் பயன்பெறும்.

மேற்கண்ட சங்கங்கள் அமைக்கவிருக்கும்  திட்டங்களுக்கு அரசின் பங்குத் தொகையாக 10 கோடி ரூபாய் நிதி  வழங்கப்படும்.

3. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரமாக தேயிலை விளங்குகிறது. தேயிலை தொழிற்சாலைகள் அம்மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளின் பொருளாதார நிலையினை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும், தேயிலைச் சந்தை அவ்வப்போது எதிர்கொள்ளும் விலை ஏற்றத்தாழ்வினால், தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் அத்தேயிலைத் தொழிற்சாலைகள், பசுந்தேயிலை வழங்கும் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நியாயமான விலை வழங்க இயலாமல் போகிறது. இவ்வாறு ஏற்படும் சூழ்நிலையில், சிறு தேயிலை விவசாயிகளின் நலன் காக்கும் பொருட்டு, 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “விலையினை நிலைநிறுத்தும் நி யம்” ஒன்றினை இண்ட்கோசர்வ்வுடன் இணையது ஒரே தவணையாக 2014-15-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், விலை ஏற்றத்தாழ்வு நிலை அடிக்கடி ஏற்படுவதாலும், சிறு தேயிலை விவசாயிகளின் நலன் பெரிதும் பாதிக்கப்படுவதாலும், இச்சிக்கலுக்கு நீண்டகால தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நடப்பாண்டில், நீலகிரி மாவட்டத்தில் கைகாட்டி மற்றும் மகாலிங்கா தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தலா 2 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் இமாச்சல பிரதேசம், பாலம்பூர் இமாலயன் உயிரி வள தொழில்நுட்ப நிறுவன உதவியுடன் தேயிலை பாலிபினால்ஸ் / பசுந்தேயிலை சாறு கலந்த கேட்டச்சின் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை உற்பத்தி  பிரிவுகள் தொடங்கப்படும் 

* * * * *

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை
தமிழ்நாடு அரசு, நடப்பாண்டில் சமூக நலத் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்பினை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக அரசால் தற்போது 36 அரசு குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகக் கட்டடம் கட்டப்பட்டு 38 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மிகவும் பழுதடைந்துள்ளதால், தற்போதுள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் 100 குழந்தைகள் தங்கும் வகையில் வகுப்பறைகள், அலுவலக அறை, உணவருந்தும் கூடம், நவீன சமையலறை, பண்டக பொருட்கள் வைப்பறை, துயிற்கூடங்கள் (கழிவறை மற்றும் குளியலறை வசதியுடன்)  தியான அறை, பொழுது போக்கு அறை, பணியாளர்கள் அறை மற்றும் 10 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 9 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.

* * * * *
மாற்றுத்  திறனாளிகள் நலத் துறை
ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே நடைமுறைப்படுத்த இருந்த 3 சதவீத இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழ்நாடு அரசு பணிகளிலும் உயர்த்தி  வழங்க ஆணையிட்டுள்ளது. இந்த 4 சதவீத இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி  உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும். மாற்றுத்  திறனாளிகளுக்கு மேலும் பயனளிக்கக் கூடிய வகையில் பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

1. கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்  திறனாளிகளுக்கு முடநீக்கியல் சாதனங்கள், ஊன்றுகோல்கள் மற்றும் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு அவர்களுடைய சுதந்திரமான நடமாட்டத்திற்கு ஏதுவாக பல்வேறு வகையான மறுவாழ்வு பணிகள் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்கள் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நடக்க உதவும் நடைபயிற்சி உபகரணங்கள் (Rolator/Walker) நடப்பாண்டில் 1000 குழந்தைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

2. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ல் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதை உறுதி  செய்திடும் வகையில், அனைத்து அரசு பொதுக் கட்டடங்களிலும் மின்தூக்கிகள், சாய்வு தள பாதை, கழிவறை வசதிகள் மற்றும் செவி திறன் குறையுடையோர் எளிதில் அறியும் வண்ணம் குறியீடுகளும், பார்வையற்றோர் அறியதுகொள்ளும் வண்ணம் பிரெய்ல் எழுத்துக்கள் மூலமும் தகவல் பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வசதிகளை ஏற்படுத்த, நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர் / பணியாளர்கள் அடங்கிய தணிக்கை குழு நடப்பாண்டில் அமைக்கப்படும். இக்குழு தன்னுடைய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மாற்றுத்  திறனாளிகளுக்கு ஏற்ற தடையற்ற சூழலை முழுமையாகவும் விரைவாகவும் ஏற்படுத்திட இயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

C.P.சரவணன், வழக்கறிஞர்
தொடர்புக்கு- 9840052475

....

தமிழ்நாடு சட்டப் பேரவை எண் : 020 நாள் : 29.06.2017
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com