சிவன்: வேறு கலாசாரங்களில், வேறு தேசங்களில்!

சிவலிங்கங்களும் பாம்பு வழிபாடும் பண்டைய உலகம் முழுதும் விரவிக் கிடந்ததற்கான
சிவன்: வேறு கலாசாரங்களில், வேறு தேசங்களில்!

சிவலிங்கங்களும் பாம்பு வழிபாடும் பண்டைய உலகம் முழுதும் விரவிக் கிடந்ததற்கான ஆதாரங்களை பரவலாக காண முடிகிறது. கிட்டதட்ட கி.மு. 9000ம் ஆண்டில், துருக்கியில் உள்ள கோபெல்கி எனும் இடத்தில், ஒரு ஆணின் தலையில், கழுத்திலிருந்து தலைக்கு ஏறும் பாம்பு உருவத்தை பார்க்க முடிகிறது. காலம் காலமாய் இந்தியாவில் சிவனை சித்தரிக்கும் பாங்கு இது. சிவனின் கழுத்தில் எந்நேரமும் பாம்பு தன் தலையை உயர்த்தியபடியே நிற்கிறது. அவனது குண்டலினி சஹஸ்ரார சக்கரத்திற்கு ஏறிவிட்டது என்பதை சொல்வதாய் அது அமைந்திருக்கும்.
 

ஹரப்பா நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுபதிநாதர் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையைப் பற்றி இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

இதைப் போன்றதொரு சித்தரிப்பு கிட்டத்தட்ட கி.மு. 200ல், ஐரோப்பாவில் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இதனை கண்டர்ஸ்ட்ரப் கால்ட்ரான் என்று அழைக்கிறார்கள். அப்படியென்றால், பிரம்மாண்ட வெள்ளி பாத்திரம். கண்டெடுக்கப்பட்ட இடம் – ஜெர்மனி.

பண்டைய ரோமாபுரியிலும் லிங்க வழிபாடு வழக்கத்தில் இருந்ததை பார்க்க முடிகிறது. அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் மரத்திற்கு அடியில் லிங்கங்கள் இருப்பது போன்ற சித்தரிப்புகள் உள்ளன. கிராமப்புற இந்தியாவில் சிவலிங்கங்கள் இப்படித்தானே வழிபடப்படுகின்றன! ஐரோப்பாவில் இதுபோன்ற கற்களை கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பேட்டில்ஸ் என்று பெயரிட்டார்கள். சில கற்கள் ரோமாபுரிக்கும், ரோமாபுரி ஆட்சி நடத்திய நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. லிங்கவடிவ கற்களை ரோமாபுரிக்கு எடுத்துச் சென்ற ஒரு பேரரசரின் பெயர் எல்ஜிபலஸ். இந்தப் பேரரசர் அந்தக் கற்களுக்கு ஆலயங்களையும் எழுப்பி உள்ளார். ஆலயங்கள் எழுப்பியவுடன் அவர் படுகொலை செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து நடந்த சோக வரலாறு.

3ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சிரிய எழுத்தாளர் ஒருவர், இந்தியாவிலிருந்து சில புனிதமான மனிதர்கள் பேரரசர் எல்ஜிபலஸ்-சை பார்க்க ரோமாபுரிக்கு பயணம் செய்தனர் என்று எழுதியிருக்கிறார். கி.பி 330ற்கு பிறகு, அங்கிருந்த பல கோவில்கள், பின்னாளில் ரோமாபுரியை ஆண்ட அரசர்களால் நிர்மூலமாக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசியாவிலும் லிங்க வழிபாடும், பாம்பு வழிபாடும் வழக்கில் இருந்தததை பார்க்க முடிகிறது. ஜப்பானில், இன்றும்கூட இந்தியக் கடவுளர்கள் வழிபடப்படுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் அங்கு ஏற்றுமதியாகி பல வருடங்கள் ஆகிவிட்டதால், ஜப்பானிய பெயருடன் காட்சி அளிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஜப்பானிய தலைநகரான டோக்கியாவிலுள்ள ஷோடன்-ஷோ எனும் இடம் பல்வேறு கோவில்களையும் ஆலயங்களையும் கொண்டுள்ளது. பிரபலமானது. அங்கு, கூட்டம் அதிகமாக இருக்கும் சந்தைத் தெருக்களில் கூட சிவனுக்கும் சரஸ்வதிக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.

பல கடவுளர்களின் பெயரை நேரடியாய் ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்த்து அவர்கள் அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, டைக்கோகுட்டேன் என்றால் “உயர்ந்த சிரசுடைய இறைவன்” என்று பொருள். இதனை சிவனுடைய “மஹாகால” ரூபத்துடன் ஒப்பிடுகிறார்கள். மகேஷ்ஷுரா என்றும் ஈஷநாதேன் என்றும் ஜப்பானில் கடவுள்கள் உண்டு. இவை இந்திய காதுகளுக்கு பழக்கப்பட்ட சப்தங்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

8ம் நூற்றாண்டில், மொகலாயர்களின் ஊடுறுவலுக்கு முன்னர், இந்தியாவில் லிங்க வழிபாடு பிரதானமாய் இருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து பர்மா வரை, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பல ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் இருந்தன. பிரபலமான பல கோவில்கள் இன்று காணாமல் போய்விட்டது என்னவோ நம் துரதிருஷ்டம்தான். உதாரணத்திற்கு, தற்போதைய பாகிஸ்தானில் மூலஸ்தானம் என்ற மிக சக்திவாய்ந்த, தீவிரமாய் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஆலயம் இருந்தது. இன்று மூலஸ்தானம் இல்லை, அங்கு எஞ்சி இருப்பது முல்தான் என பெயர் மாற்றப்பட்ட ஒரு இடம் மட்டுமே. 

நன்றி

சிவன்… வேறு கலாசாரங்களில், வேறு தேசங்களில்! http://isha.sadhguru.org/blog/ta/shivan-veru-kalacharangalil-veru-desangalil/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com