உங்கள் ஆதார் எண்ணை இனி கடைகளில் பயன்படுத்துங்கள்!

கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் இல்லாமல் கடைகளில் வாங்கிய பொருட்கள்
உங்கள் ஆதார் எண்ணை இனி கடைகளில் பயன்படுத்துங்கள்!

கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் இல்லாமல் கடைகளில் வாங்கிய பொருட்களுக்குப் பணம் செலுத்தும் வகையில், ஆதார் எண் அடிப்படையிலான புதிய திட்டம் ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலாக்கம் பெறுகிறது. கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்க இனி உங்களிடம் இருக்க வேண்டியது ஒன்று தான். அது உங்களுடைய ஆதார் எண்.

அரசின் இந்தப் ஆதார் பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Payment System (APS) ஏப்ரல் 14 முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். பணம் அல்லது கார்டுகளை சுமந்து செல்லாமல் இருந்த இடத்திலிருந்து ரூபாய் நோட்டுகள் இல்லாமல் டிஜிடல் வர்த்தகம் மூலம் உங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளும் வசதி வந்துவிட்டது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான் என்றார் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாகி மற்றும் சேர்மனான ஏ.பி.ஹோடா.

இந்த ஆதார் பெமெண்ட் சிஸ்டம் எப்படி செயல்படும்? உங்கள் ஆதார் எண் மற்றும் விரல்ரேகை, கண்கருவிழி அடையாளம் அடிப்படையிலான அங்கீகரிப்பு போதும். டெபிட், க்ரெடிட் அட்டைகள் இல்லாத வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பெரிதும் பயன்பெறுவார்கள். தவிர இது உங்கள் பணத்துக்கும் பாதுகாப்பு.

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட வங்கிகள் வணிகக் கடைகளுடன் இணைந்துள்ளன. மேலும் சில வங்கிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட உள்ளன. இரண்டு நபர்களுக்கு இடையே, அல்லது கடையில் பொருட்கள், சேவைகள் வாங்கும்போது, டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம்செலுத்துவோம். அப்போது, பாஸ்வேர்டு போன்றவைகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இனி வாடிக்கையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான பணப்பரிமாற்றத்தின் போது, இருவருக்கும் வங்கிக்கணக்கிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால், அந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி பணம் செலுத்தமுடியும். இதற்கான விரல்ரேகை, கண்கருவிழி அடையாளம் ஆகியவை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும். ஆதார் எண் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் டெபிட், கிரெடிட்கார்டு, பின் நம்பர் போன்றவை இல்லாமலேயே நடக்கும். இதுவரை ஆதார் எண் பதிவோர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 7 லட்சமாக இருந்தது. எங்களுடைய இலக்கு நாடு முழுவதும் 25 மில்லியன் பணமற்ற வர்த்தக பரிவர்த்தனைகள். இந்த ஆண்டின் முடிவுக்குள் அது 5.4 மில்லியனாக உயரும் என்று ஏதிர்ப்பார்க்கிறோம். ஆதார் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான மேலும் 44 வங்கிகளை இணைப்பில் சேர்க்க உள்ளோம், நாளொன்றுக்கு 2.2 லட்சம் பண பரிமாற்றம் நடைபெறும் என்றும் எதிர்ப்பார்க்கிறோம். இதற்கான பிம் ஆப்பின் மூலம் இது சாத்தியப்படும்’ என்றார்  ஹோடா.

தற்போது ரிலையன்ஸ் கடைகளில் இந்தப் புதிய முயற்சி தொடங்கப்படும். மும்பையிலுள்ள ரிலையன்ஸ் கடைகளில் இந்த புதிய PoS கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இது அனைத்துக் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com