எழுத்துப் படைப்பும் நவீன தொழில் நுட்பமும்

தொழில்நுட்ப வளர்ச்சியும் படைப்பாற்றலும் கொடுக்கல் வாங்கலில் என்றைக்குமே
எழுத்துப் படைப்பும் நவீன தொழில் நுட்பமும்

தொழில்நுட்ப வளர்ச்சியும் படைப்பாற்றலும் கொடுக்கல் வாங்கலில் என்றைக்குமே பின் தங்கி இருந்ததில்லை. பார்க்கப் போனால் தொழிற்புரட்சி காலகட்டத்திற்குப் பிறகு படைப்பாற்றல் சில புதிய பரிணாம மாற்றங்களையும் கூட அடைந்திருக்கிறது. உதாரணமாக புகைப்பட கலை மற்றும் சினிமா கலையைக் குறிப்பிடலாம். தொழில்நுட்ப வளர்ச்சிகள் படைப்புக்களை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை லகுவாக்கியபடி இருக்கிறது. சில சமயங்களில் இல்லாமல் கூட ஆக்கிவிடுகிறது.

மற்ற எந்தக் கலைகளையும் விட இலக்கியம் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் தினப்படி பலன்களை அடைந்தபடி இருக்கிறது. இலக்கியத்தைப் பொறுத்த வரையில் நடைமுறை சார்ந்து, அதாவது எழுதப்பட்ட இலக்கியம் அதற்கான வாசகனைச் சென்று அடையும் நடைமுறை – பத்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலை இன்றைக்கு கிடையாது. இணையம் மற்றும் பதிப்புத் துறையின் நவீன வளர்ச்சிகள் எழுத்தாளர்களின் படைப்புக்களை வெகு விரைவில் அதற்குரிய வாசகர்களிடம் கொண்டு சேர்த்துவிடுகின்றன. இணையம், எழுதப்பட்ட படைப்புக்களை ஒரு சில மைக்ரோ வினாடிகளில் அதன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் வேகத்துடன் இப்போது பதிப்பு துறையும் போட்டியிட தொடங்கிவிட்டது.

மின்னூல்கள் இணைய வழி வாசகனை அடையும் வேகத்திற்கு இணையாகக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்களும் வாசகனைச் சென்று அடையும் நாட்களும் வந்தேவிட்டது. தொண்ணூறுகளின் இறுதி ஆண்டுகளிலேயே மேற்கில் பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் (Print on demand) என்கிற தொழில்நுட்பம் இதைச் சாத்தியப்படுத்திவிட்டது. சமீப ஆண்டுகளில் நம்மிடையேயும் இந்தப் பதிப்பு தொழில்நுட்பம் வலுவாகக் கால் பதிக்கத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் இன்கிராம் என்கிற புத்தக விநியோக நிறுவனம் 1997-களில் லைட்டினிங்சோர்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி அமெரிக்காவில் பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் புரட்சியைத் தொடங்கியது. தொடங்கிய அடுத்த பத்தாண்டுகளில் சுமார் இருபது மில்லியன் புத்தக காப்பிகளை பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் தொழில்நுட்பத்தில் அச்சடித்துத் தள்ளியிருக்கிறது லைட்டினிங்சோர்ஸ்.

அடுத்து வர இருக்கும் பத்தாண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 50% புத்தகங்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே வாசகர்களைச் சென்றடைய இருக்கிறது என்று இண்டர் குவஸ்ட் என்கிற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறது. அனைத்து புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் முதலில் பாதக மனநிலையுடன் அணுகும் நம்முடைய வழக்கப்படி இதையும் அணுகிக் கொண்டிருக்கிறோம் இன்றைய நிலையில். நாம் இந்தக் கட்டுரை பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் தொழில்நுட்பத்தைக் குறித்து விரிவாகப் பார்க்கும் நோக்கம் கொண்டதல்ல – இது குறித்து மற்றொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். மாறாக இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தமிழ் மொழிக்கு எப்படியான புதிய எழுத்துப்படைப்புக்களை படைப்பாளிகளைக் கொண்டு வர முடியும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கப் போகிறோம்.

தொடரும்…

- அந்தாழை குழு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com