இந்த மாமனார் திரைப்படங்களில் மட்டுமே வில்லன்; ஆனால், தன் மருமகனுக்கு ஹீரோ!

இந்தச் சூழலில் தான் சாஹீனுடன் ஆசிஷுக்கு காதல் வந்தது. முதலில் சாஹீனிடம் அவரது தந்தை குறித்து பயந்திருக்கிறார் ஆசிஷ். “எந்த ஒரு தகப்பனும், தனது மகளை ஆரோக்கியமான நபருக்கே திருமணம் செய்து 
இந்த மாமனார் திரைப்படங்களில் மட்டுமே வில்லன்; ஆனால், தன் மருமகனுக்கு ஹீரோ!

குஜராத்தைச் சேர்ந்த வில்லன் நடிகரான ஃபெரோஸ் வோரா தன் மருமகனுக்காகச் செய்தது மிகப்பெரிய தியாகம். இதை தியாகம் என்று சொல்லக் கூட அவர் ஒப்பவில்லை. மருமகனைத் தன் மிகச் சிறந்த நண்பன் என்கிறார். "என் மகளை விட என் மருமகனிடம் தான் என்னால் அனைத்து விசயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த நட்பாக நான் என் மருமகனைக் கருதுகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமெனில் நான் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளில், குற்றங்களில் கூட நான் வேறு எஅவரையும் விட என் மருமகனைத் தான் முதலில் கூட்டுச் சேர்த்துக் கொள்வேன்" என்று குறும்பாகச் சிரிக்கிறார் ஃபெரோஸ்.

இத்தனை அருமையான நட்புடன் ஒரு மாமனார், மருமகனை நாம் இது வரை கண்டிருக்க முடியாது. உறவுகளில் மிக மிகச் சிக்கலான உறவென்றால் அது மாமனார், மருமகன் உறவு தான். மிக, மிகப் ப்ரியமாக வளர்த்த தனது மகளை அன்பாலும், உரிமையாலும் தம்மிடமிருந்து பிரித்து ஆதிக்கம் செலுத்த வந்திருக்கும் புது உறவான மருமகன்களிடம் பெரும்பாலான மாமனார்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியுடன் தான் பழகுவார்கள். அந்நியோன்யமான மாமனார், மருமகன் உறவென்பது எங்கேயோ அத்திப் பூத்தார் போல எப்போதாவது நிகழ்வதுண்டு. அதுவே அந்நியோன்யமான மாமியார், மருமகள் உறவென்றால் நம்மிடையே நிறைய உதாரணங்களை கண்கூடாகப் பார்க்க முடியும். ஆனால் மாமனார், மருமகன் அந்நியோன்யம் என்பது அப்படிப் பட்டதல்ல. அதனால் தான் இந்த மாமனாரும், மருமகனும் நமது கவனத்தை ஈர்க்கிறார்கள்.

அதோடு இந்த மாமனார் தன் மருமகனுக்காகச் செய்திருப்பது சாதாரண விசயமல்ல. திருமணத்திற்கு முன்பே இருமுறை கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளான நபரென அடையாளம் காணப்பட்ட ஆசிஷ் வோராவைக் காதலிக்கிறேன் என்று தன் முன் வந்து நின்ற மகளை... ஃபெரோஸ் வழக்கமான அப்பாக்கள் போல ‘என்ன பேசுகிறாய்? உனக்கு அறிவில்லையா? ஒரு நோயாளியையா திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறுகிறாய்... அப்படியென்ன காதல்?!’ என்று எரிந்து விழுந்து அவர்களது காதலுக்கு தடை போடவில்லை. மாறாகத் தன் மகளை மிகுந்த நம்பிக்கையுடனும் அன்புடனும் ஆசிஷுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் ஃபெரோஸ்.

தனது ஒப்புதலுக்கான காரணத்தை அவர் ஒரே ஒரு வாக்கியத்தில் பதிலாக வழங்கினார் இந்த உலகுக்கு. அது; “உண்மையான காதல் என்றும், எப்போதும் தோற்கவே கூடாது” என்பதே! தான் பெருமையாகச் சீராட்டி வளர்த்த மகளை காதல் தோற்கக் கூடாது என்று ஆசிஷுக்கு திருமணம் செய்து வைத்ததோடு முடிந்து விடவில்லை ஃபெரோஸின் தியாகம்.

தற்போது 35 வயதாகும் ஆசிஷ் வோராவுக்கு சிறுவயது முதலே சிறுநீரகக் கோளாறுகளால் ஆன உடல் உபாதைகள் இருந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் ஆசிஷின் சிறுநீரகம் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள அப்போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. மாற்றிப் பொருத்தப் பட்ட சிறுநீரகமும் சில வருடங்களில் சிக்கலான உபாதைகளைத் தோற்றுவிக்க வேறு வழியின்றி ஆசிஷின் தாயார் சுபைதா தனது சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக வழங்கி இருக்கிறார்.  சில மாதங்களில் தாயாரின் சிறுநீரகமும் ஆசிஷுக்கு பொருந்தாமல் உடல் ஒத்துழைக்க மறுக்க வேறு வழியின்றி அவரது சகோதரியின் சிறுநீரகத்தை தானமாகப் பெறலாம் என்று முடிவெடுத்தனர். இந்த நிலையில் தான் இறந்து போன ஒருவருடைய உடலில் இருந்து தானமாகப் பெறப்பட்ட சிறுநீரகம் ஒன்று ஆசிஷுக்கு தானமாகக் கிடைத்தது. தற்போது ஆசிஷ் நலமுடன் வாழ்ந்து கொண்டிருப்பது அந்த சிறுநீரகத்தின் தயவில் தான்.

இந்தச் சூழலில் தான் சாஹீனுடன் ஆசிஷுக்கு காதல் வந்தது. முதலில் சாஹீனிடம் அவரது தந்தை குறித்து பயந்திருக்கிறார் ஆசிஷ். “எந்த ஒரு தகப்பனும், தனது மகளை ஆரோக்கியமான நபருக்கே திருமணம் செய்து கொடுக்க விரும்புவார். உன் அப்பா நம் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வது கடினம் சாஹீன்” என்றே ஆசிஷ் சாஹீனிடம் கூறி இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஃபெரோஸ் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டியதோடு மட்டும் நில்லாமல் தன் மருமகனிடம் மிகுந்த நட்புணர்வுடன் பழகும் மாமனாராகவும் மாறிப் போனது ஆசிஷ் கடந்த பிறவியில் செய்த் புண்ணியங்களின் பலன் என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரியம் இருவருக்குள்ளும்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக ஃபெரோஸ் ஒரு சேதி சொல்லி இருக்கிறார். இரண்டாவதாகப் பொருத்தப் பட்ட சிறுநீரகத்தினால் பின்னாட்களில் ஏதேனும் சிக்கல் வந்து விட்டாலும் கூட நான் தயங்கப் போவதே இல்லை. ஓ பாஸிட்டிவ் வகை ரத்தம் கொண்ட நான் என் மருமகனுக்காக எனது சிறுநீரகத்தை தானமாக வழங்க எப்போதும் தயாராக இருக்கிறேன். என்று அறிவித்திருக்கிறார். ஆசிஷ்க்கு எப்பேர்ப்பட்ட மாமனார் பாருங்கள்?!

இப்படிப்பட்ட மாமனாரையும், மருமகனையும் நாமும் வாழ்த்தவேண்டும் தானே!

Image courtsy: google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com