300 கோடிக்கு விற்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஓவியம் இதுதான்!

லியொனார்டோ டா வின்சியின் ஓவியம் 'சால்வேட்டர் முண்டி’ ‘Salvator Mundi' சமீபத்தில் 450.3
300 கோடிக்கு விற்கப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஓவியம் இதுதான்!


எவ்வளவு விலை கொடுத்தாலும் கலைக்கு ஓர் விலை வைக்கமுடியுமா? விலை மதிப்பில்லாத இந்த ஓவியத்தை வரைந்தவர் மோனொலிசாவைப் படைத்த லியொனொர்டொ டா வின்சி.  டா வின்சியின் இந்த ஓவியம் 'சால்வேட்டர் முண்டி’ ‘Salvator Mundi' சமீபத்தில் விடப்பட்ட ஏலத்தில் கிட்டத்தட்ட 295 கோடிக்கு (450.3 மில்லியன் டாலர்களுக்கு) விற்பனையாகி உள்ளது. இதுவரை ஓவியத்துக்கு கொடுக்கப்பட்ட விலைகளில் மிக அதிகமானது என்ற பெருமை பெற்று உலகச் சாதனை படைத்துள்ளது.

இயேசு கிறிஸ்துவின் கனிவும், தீட்சண்யமான கண்களும் குறும்புன்னகையும் மிகத் துல்லியமாக வரையப்பட்டுள்ளது இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாகும். மிகச் சிறப்பான கலையம்சம் பொருந்திய இந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்றனர் பார்வையாளர்கள்.

இதற்கு முந்தைய சாதனையான 179,364,992 டாலர்களைப் பெற்றுத் தந்தது பிகாஸோவின் 'Les Femmes d'Alger’ எனும் ஓவியம்   டாவின்சியின் 'Horse and Rider' ஓவியம் 2001-ம் ஆண்டில் 11,481,865 டாலர்களுக்கு ஏலத்தில் விலை போனது.

'சால்வேட்டர் முண்டி’ என்ற இந்த ஓவியத்தை லியொனார்டோ டா வின்சி 1500-ம் ஆண்டின் துவக்கத்தில் வரைந்துள்ளார். அதன் பின் பல காலகட்டங்களில் இருபதுக்கும் மேலான அதன் நகல்கள் உருவாகின. கலை வரலாற்று ஆசிரியர்கள் அசல் எது நகல் எது எனப் பிரித்துச் சொல்லக் கூடியவர்கள். அவர்கள்தான் இந்த 20 பிரதிகளை அடையாளம் கண்டுள்ளனர். அசல் படைப்பான சால்வேட்டர் முண்டி நீண்ட காலத்துக்குப் பிறகு காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலைப்பொருட்களை விற்பனை செய்யும் ராபர்ட் சைமன் என்பவர் 2005-ல் ஒரு கலைஞனிடமிருந்து இந்த ஓவியத்தை வாங்கி இருக்கிறார். அந்த ஓவியத்தைப் பற்றிய தகவல்களை மீட்டெடுக்க தனது நண்பரான டயான்னி மோடிஸ்டினிடம் யோசனை கேட்டுள்ளார்.

டயானாவின் முயற்சியால் இந்தப் ஓவியம் லியொனார்டோ டா வின்சியின் 'சால்வேட்டர் முண்டி’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. டயானாவின் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்களை கடக்க இந்த ஓவியம் உதவியது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com