அரசுத் தொடக்கப் பள்ளிக்கு பொதுமக்கள் வழங்கிய ’கல்விச் சீர்'

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அரசு ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளர்ச்சிக்காக அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்விச் சீர் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழாவில் புதுகும்மிடிப்பூண்டி காளத்தீஸ்வரன் கோயிலில் பொதுமக்கள் அளித்த பொருள்கள்.
பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழாவில் புதுகும்மிடிப்பூண்டி காளத்தீஸ்வரன் கோயிலில் பொதுமக்கள் அளித்த பொருள்கள்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அரசு ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளர்ச்சிக்காக அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்விச் சீர் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளியின் ஆசிரியர்கள், கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் பள்ளிக்கு அவர்களால் இயன்ற கல்வி சீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், முக்கிய பிரமுகர்கள். தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் வழங்கப்பட்டன.
அதன்படி பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் புதுகும்மிடிப்பூண்டி காளஸ்தீஸ்வரன் கோயில் அருகில் கூடி தங்களால் இயன்ற கல்விச்சீர் பொருள்களை கோயில் வளாகத்தில் வைத்தனர்.
தொடர்ந்து பள்ளிக்கு கல்வி சீர் கொண்டு செல்லப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் இந்துமதி வரவேற்றார்.
தொடக்கக் கல்வி அலுவலர் மீனாதேவி வாழ்த்தி பேசினார். விழாவை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மா.செல்வராஜ், ஒன்றியக் கவுன்சிலர் கணபதி, ஊராட்சிச் செயலாளர் சிட்டிபாபு, சமூக ஆர்வலர் இ.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மேளதாளத்துடன் பொதுமக்களும், மாணவர்களும் பள்ளிக்கு கொண்டு வந்த பொருள்களை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். இது குறித்து புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த இ.எஸ்.ராமச்சந்திரன் கூறுகையில், எங்கள் பள்ளி எங்கள் பெருமை, எங்கள் பள்ளி எங்கள் உரிமை, எங்கள் பள்ளி எங்களை வளர்த்தது, அத்தகைய பள்ளிக்கு எங்களால் இயன்றதை செய்யும் வகையில் பள்ளி நிர்வாகத்தோடு இணைந்து இந்த விழாவை நடத்தியுள்ளோம் என்றார்.
விழாவில் திரளானோர் கலந்து கொண்டு பள்ளிக்கும், மாணவர்களுக்கும் தேவையான உதவி பொருள்களை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com