ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017க்கான விண்ணப்பங்கள் பிப்பரவரி 15 முதல் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  
ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?
Updated on
1 min read

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017க்கான விண்ணப்பங்கள் பிப்பரவரி 15 முதல் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  
TNTET 2017 - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் டிஆர்பி அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெள்ளிக்கி அன்று காலை 11 மணியவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிர்யர் தகுதித் தேர்வு 2017:
- TNTET 2017 தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறலாம்.
தேர்வுகள்:
- தாள் I - 29.04.2017
- தாள் II - 30.04.2017
- தாள்  I மற்றும் தாள் IIக்கான தனித்தனியான விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.
- மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் 15.02.2017 அன்று முதல் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடந்த தேர்வை போலவே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.
- மாவட்ட அளவில் இப்பணிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமை தாங்குவார்.
- விண்ணப்பங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும். பிப்ரவரி மாதம் இறுதி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
- அதிகபட்சமாக 7 லட்சம் விண்ணப்பங்கள் விற்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்ப்பு.
- தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4 ஆயிரம் மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
- தேர்வு பணியில் ஏறத்தாழ 40 ஆசிரியர்கள் பன்படுத்தப்படலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று அதற்கான ரசீது வழங்க மாவட்ட கல்வி அலுவலகத்தில் 13 குழுக்கள் (தாள் 1க்கு 6 குழுக்களாகவும், தாள் 2க்கு 7 குழுக்களாக அமைத்து செயல்படும். தேவைப்பட்டால் குழுக்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படலாம்.
- விண்ணப்பங்கள் விற்கப்படும் இறுதி தேதி: 08.03.2017
- நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com