இந்தியாவில் அரசாங்க வேலை வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்

ஏதோ ஒரு காரணத்திற்காக,  நீங்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, இங்கு உங்களுக்கான ஒரு தொழிலை
இந்தியாவில் அரசாங்க வேலை வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்

ஏதோ ஒரு காரணத்திற்காக,  நீங்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்து, இங்கு உங்களுக்கான ஒரு தொழிலை அல்லது வேலையைத் தேட முயற்சிக்கிறீர்கள் எனில் தொடர்ந்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

இந்தியாவில் அரசாங்க வேலை வாய்ப்புகள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன, உங்களுடைய திறமைக்கேற்ற வகையில் விருப்பமான வேலை எதுவென தேடிக் கண்டுபிடிப்பதும் சுலபம் தான். ஆனாலும், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இத்தகைய ​​செயல்முறைகள் நடைமுறை என வரும்போது அத்தனை சுலபமானவை அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மன அழுத்தம் தருமளவுக்கு பெரிய பிரச்னை இல்லை. உங்களின் வேலை சார்ந்த தேடலை சற்று எளிமையாக்கவும், உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் மற்றும் கனவுகளை துரத்திப் பிடிக்கவும் பின்வரும் குறிப்புகள் பயன்படலாம்.

உங்களுக்கான துறையை தேர்வு செய்யவும்

நீங்கள் அரசாங்க வேலைகளை தேடும்போது, உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.  எனவே உங்களுக்கு விருப்பமான துறை எதுவென தெரிவு செய்தபின், அவற்றிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் உங்கள் திறமைக்கு எது மிகச் சிறந்தது என தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்திய நிர்வாக சேவைகள் இந்திய வருவாய் சேவைகள் அல்லது ஐஆர்எஸ் போன்ற பணிகளுக்கு, உங்கள் கல்வித் தகுதிகள் பொருந்துகிறது எனில், அந்தந்த அரசு வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகள் ஒருவர் விரும்பும் வாழ்க்கை முறையைப் பெற்றுத் தருவதுடன் அவரது சமூக அந்தஸ்து மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்திவிடும். எனவே நீங்கள் விரும்பும் வேலைக்கான வாய்ப்புகளை தெரிவு செய்து, உங்கள் நிபுணத்துவத்திற்கு ஏற்றவகையில் பொருத்தமான வேலை வாய்ப்பு ஒன்றை கண்டுபிடித்துவிடுங்கள். அதன் பின்னர், நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

விசா தேவைகள் என்னென்னவென்று முதலில் ஆய்வு செய்யவும்

நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமானவற்றில் ஒன்று, விசா பெற என்னென்ன தேவை என்பதை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்வதுதான். ஏனென்றால், இந்தியாவில் நீங்கள் குடிபெயர திட்டமிடுகிறீர்கள், அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றாலும், அதற்கான முறையான விசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விசா நடைமுறைகளை​ முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அதிர்ஷ்டவசமாக, உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான தகவல்களையும் பெற மிக எளிய வழிமுறை உள்ளது. அதுதான் இணையம். உங்களுக்குத் தேவையான அத்தனை விபரங்களையும் ஆன்லைனில் தேடலாம். உங்கள் இந்தியா விசாவை எத்தனை விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்கிறீர்களோ, அத்தனை விரைவாக உங்கள் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று நம்பலாம். இந்த சுட்டியில் மேற்சொன்ன விபரங்களை பெறலாம் - இந்திய விசா

சிறந்த வேலைகளைப் பற்றிய விளம்பரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

செய்தித்தாள்களிலிருந்து உள்ளூர் விளம்பரங்கள், இணையதளங்கள் என வேலை வாய்ப்புகள் பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு ஏற்ற வேலைக்கான அறிவிப்புகளை தொடர்ந்து படித்து வருவதுதான். உள்ளூர் பத்திரிகைகளில் வேலை வாய்ப்பு பிரிவுகளைப் படித்து, சரி பார்த்து அதன் பின்பு மிகவும் நம்பகமான வேலைவாய்ப்பு இணையதளங்களை அணுகவும். நீங்கள் விரும்பும் வேலை பற்றிய அறிவிப்பு வெளிவர சிறிது காலம் ஆகலாம், எனவே அது வெளியிடப்படும் வரை தினமும் அது குறித்த செய்திகள் ஏதாவது உள்ளதா என்று படித்து வாருங்கள். காரணம் நீங்கள் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் அது கைவிட்டுப் போய்விடும். மேலும் அரசு வேலைகள் உடனுக்கு உடன் நிரப்பப்பட்டுவிடும் என்பதையெல்லாம் நினைவில் கொண்டு தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள்.

துல்லியமான தகவல்களுடன் படிவங்களை நிரப்பவும்

நீங்கள் தேடுவது அரசாங்க வேலை என்பதால், அதற்கு விண்ணப்பிக்கும் செயல்முறைகள், மற்ற வேலைகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதைக் காட்டிலும் சிக்கலானது. விரிவான அந்தப் படிவங்களை முதலில் முழுவதுமாகப் படித்துவிடுங்கள். அதன் பின்னரே பூர்த்தி செய்யத் தொடங்குங்கள். காரணம் அப்போதுதான் மிகவும் துல்லியமாகவும் கவனமாகவும் அப்படிவத்தை நிறைவு செய்ய முடியும். உங்களுடைய சிறிய பிழை கூட அந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கு உலை வைத்துவிடலாம்.  எனவே  கேட்கப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளை எவ்வாறு, எப்படி இணைக்க வேண்டும் முதலான தகவல்களை நன்றாகப் படித்து பின்பற்றவும். மேலும்,  நேர்காணலுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால், உங்கள் முன்கூட்டியே நன்றாக தயார் செய்து கொள்ளுங்கள்.

அனுபவமே சிறந்த ஆசான்

கடைசியாக ஒரு விஷயம், இந்த செயல்பாடுகள் முழுவதிலும், நீங்கள் நேர்மறையான அணுகுமுறை கொண்டிருக்க வேண்டும். அற்புதமான வேலை வாய்ப்புகளுடன் இந்தியா உங்களை வரவேற்கிறது எனும்போது முதலில் இச்சுழலில் உங்களைப் பொருத்திக் கொள்ள நீங்கள் தடுமாறலாம். ஆனாலும் இந்தப் பயணத்தில் கூடுமானவரை நேர்மறையான மனநிலையில் இருங்கள். இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஊடகங்களின் மூலம் செய்திகளைப் படித்தும் பார்த்தும் அங்குள்ள நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏற்ற நண்பர்களை தேடிக் கொள்ள தயாராக இருங்கள்.  இது உங்கள் புதிய வேலை மற்றும் வாழ்க்கைக்கான மாற்றத்திற்கு உண்மையாகவே உதவும்.

உங்கள் வேலை வேட்டை தொடங்குவதற்கு முன்னால், ஒரு சில விவரங்களை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.  இந்தியாவில் குடிபெயரும் உங்கள் முடிவானது சில பொறுப்புகளை உள்ளடக்கியிருக்கிறது. வெளிநாட்டில் வேலை கிடைப்பது உங்கள் சொந்த நாட்டில் பெறுவது போன்றது அல்ல. உங்கள் ஒட்டுமொட்ட வாழ்க்கையிலும் அது ஒரு திருப்புமுனை. புதிய இடத்தைப் பற்றிய முழுமையான அறிதலும், மாற்றத்துக்கான மனப்பக்குவமும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். வாழ்வியல் முறையில் தொடங்கும் வித்தியாசம் எல்லா விஷயங்களிலும் தொடரும். எனவே மேற்சொன்ன வழிகாட்டுதல்களை மனத்தில் வைத்து,  உங்கள் பயணத்தை இனிதாக்கிக் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com