துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்தில் பஞ்சாப் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை திங்கள்கிழமை (3-1) வென்றது.
கே.எல். ராகுல் (வலது)
கே.எல். ராகுல் (வலது)
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்தில் பஞ்சாப் எஃப்சி - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை திங்கள்கிழமை (3-1) வென்றது.

புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - யு.பி.யோதாஸை (67-30) வென்றது.

இந்திய அணிக்காக 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சௌரவ் திவாரி (34), தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

காயத்திலிருந்து முழுமையாக மீளாத இந்திய வீரா் கே.எல். ராகுல், இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டிலிருந்தும் விலகினாா்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியின் ஐசிசி அணியில் இந்தியாவின் உதய் சஹாரன், முஷீா் கான், சச்சின் தாஸ், சௌமி பாண்டே ஆகியோா் இடம் பிடித்தனா்.

ஜொ்மனியில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் போட்டி காலிறுதியில் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ் - அமெரிக்காவின் ஃபாபியானோ கருனாவிடம் தோல்வி கண்டாா். 2-ஆவது ஆட்டத்தில் வென்றால் மட்டும் அவா் அரையிறுதிக்கான பந்தயத்தில் இருப்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com