வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது சரியா? 

உங்களில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அது குறித்து
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது சரியா? 

உங்களில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அது குறித்து பல சந்தேகங்கள் இருக்கும். ஜிம் சென்று கற்றுக்கொள்வதா, அல்லது யூ ட்யூப்பில் பார்க்கக் கூடிய உடற்பயிற்சிகளை பின் பற்றலாமா என்று யோசிப்பீர்கள். எப்படியோ உடற்பயிற்சி செய்ய தொடங்கிவிட்டால் ஒன்றின் பின் ஒன்றாக பல கேள்விகள் தோன்றும். அப்படிப்பட்ட கேள்விகள், முக்கியமான ஒன்றுதான் சாப்பிடும்  முன்னர் உடற்பயிற்சியை செய்யவேண்டுமா அல்லது நன்றாக சாப்பிட்ட பின் உடற்பயிற்சி செய்யலாமா என்பது. இந்தக் கேள்விக்குப் பதிலாக சமீபத்திய ஆய்வு ஒன்றின் விளக்கம் உங்களுக்கு உதவக் கூடும். இந்த ஆராய்ச்சியில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சிகளை செய்யும் போது ஏற்படும் விளைவுகளும் அது நீண்ட கால உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மைகளையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில் உணவு சாப்பிட்ட பின்னர் சிறிது இடைவெளியில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியின் போதும், வெறும் வயிற்றில் செய்யப்பட்ட உடற்பயிற்சியின் போது உடலிலுள்ள அடிபோஸ் திசுக்களின் மாற்றங்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளனர். அடிபோஸ் திசுக்கள் என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசமானவை ஐந்து வகை ஊட்டச் சத்துக்கள். அவை மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் ஆகியவை. முதல் மூன்றும் அதிகளவில் உடலுக்குத் தேவை. மற்ற இரண்டும் போதிய அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்குத் தேவை. இந்த ஐந்து வகை ஊட்டச் சத்துக்கள் கொழுப்பு சத்துக்களில் கொழுப்பு சத்துக்கள் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. உடலில் செலவழிக்கப்படாத கொழுப்பு ட்ரைகிளைசிரைஸ் வடிவத்தில் உடலின் அடிபோஸ் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது. அடிபோஸ் திசுக்கள், தோலுக்கு அடியில் புட்டத்தில் மற்றும் சிறுநீரகத்தைச் சுற்றி கொழுப்பாக இருப்பவை. உடலுக்குத் தேவையான போது கொழுப்புச் சக்தியை எடுத்துக் கொடுக்கும் தன்மையுடன் இருப்பவை அவை.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது அடிபோஸ் திசுக்கள் நன்றாகத் தூண்டப்படும். அடிபோஸ் திசுக்கள் தூண்டப்படும் போது அவை நீண்ட கால உடல் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். அதுவே உணவு சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் அடிபோஸ் திசுக்களில் எவ்வித மாற்றமும் இருக்காது மாறாக குறைவு இருக்கும் என்கிறார் பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டிலான் தாம்ஸன்.

உணவு சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் அடிபோஸ் திசுக்களை நாளாவட்டத்தில் மழுங்கடித்துவிடும் என்கிறார்கள் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிஸியாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

அதிக எடையுள்ள 60 ஆண்களை ஒரு குழுவாகப் பிரித்து அவர்களை 60 நிமிடங்கள் நடக்கச் செய்தார்கள். வெறும் வயிற்றில் அவர்கள் நடைப்பயிற்சிக்கு  உட்படுத்தினார்கள். அவர்கள் 60 சதவிகிதம் பிராண வாயுவை பயன்படுத்தியிருந்தார்கள். அதே நபர்களை மற்றொரு நாள் அதிக கலோரிகளை  உடைய உணவு சாப்பிட வைத்தபின், இரண்டு மணி நேரம் கழித்து நடைப்பயிற்சி செய்ய அறிவுறுத்தினார்கள். அந்த இரண்டு நாட்களிலும் அவர்கள் உணவு சாப்பிட்ட பின்னர், சாப்பிடும் முன் என இருநிலைகளிலும் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனைக்கு செய்யப்பட்டது. இது தவிர அவர்களின் கொழுப்பு திசுக்களையும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனைக்கு எடுத்தனர். இந்த இரண்டு நிலைகளிலும் அடிபோஸ் திசுக்களின் ஜீன் எக்ஸ்ப்ரஷனில் மாறுபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

PDK4 மற்றும் HSL ஆகிய இந்த இரண்டு மரபணுக்கள் உணவுக்கு முன் செய்யப்பட்ட பயிற்சியில் அதிகரித்திருந்தது. உணவுக்கு பின்னால் செய்த உடற்பயிற்சியில் இவை குறைந்திருந்தது. அப்போது சாப்பிட்ட உணவிலிருந்து மாவுச் சத்து பயன்படுத்தப்படவில்லை. ஆனால் PDK4 உயர்வால் ஏற்கனவே சேர்த்து வைக்கப்பட்டிருந்த கொழுப்புச் சத்தானது உடற்பயிற்சியின் போது பயன்பட்டிருக்கிறது என்று கண்டறிந்தனர்.

உணவுக்கு முன்னால் வெறும் வயிற்றில் உடற்பயிற்ச்சிகளை செய்யும் போது இந்த அடிபோஸ் திசுக்கள் தூண்டப்பட்டு அதனுள் சேமிக்கப்பட்ட சத்துக்களை உயர்த்தி HSL ஐ அது உயர்த்துகிறது என்றார் தாம்ஸன். மேலும் அவர் கூறுகையில், இதுவே உணவுக்கு முன் உடற்பயிற்சி குறித்த முதல் ஆய்வு எனவும் இதன் மூலம் உணவு சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சி செய்தால் அது அடிபோஸ் திசுக்களின் மரபணு வெளிப்பாடுகளில் அனேக பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் என்றும் பதிவு செய்தார் தாம்ஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com