7 நாட்களில் உடல் எடையைக் குறைக்க ஈஸி வழி

என்ன திடிர்னு இப்படி இளைச்சிட்டீங்க இப்படிஒரு கேள்வி கேட்கப்படணும்னு பலர்
7 நாட்களில் உடல் எடையைக் குறைக்க ஈஸி வழி

'என்ன திடிர்னு இப்படி இளைச்சிட்டீங்க?' இப்படிஒரு கேள்வி கேட்கப்படணும்னு பலர் ஆசைப்படுவது உண்மை. இதோ ஒரே வாரத்தில் உடல் மெலிய இந்த எளிய டயட்டிங் வழிமுறையைக் கடைப்பிடித்துப் பாருங்கள் என்கிறார்கள்  மேற்கத்திய உணவுச் சத்து ஆராய்ச்சியாளர்கள்.

இளைக்கிறேன் பேர்வழி என்று சிலர் கொலைப்பட்டினி கிடப்பார்கள் அது சரியில்லை. உடல் மெலிகிறதோ இல்லை ஹாஸ்பிடல் பில் எகிறும். எதை எதையோ செய்து பார்த்துவிட்டோம், இதைச் செய்ய மாட்டோமா என்ன?

திங்கள் - உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேற

காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்கவும். முதல் நாள் முழுவதும் திட உணவுக்கு நோ சொல்லிவிடலாம். நிறைய தண்ணீர் அருந்தவும். சர்க்கரைப் போடாத ஜூஸ் அல்லது பழக்கூல் போன்றவற்றை பசிக்கும் போது குடிக்கவும்.

செய்வாய் - பழங்கள்

இரண்டாம் நாள் முழுவதும் பழங்கள் உண்ணலாம். இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். ஆப்பிள், மாம்பழம், திராட்சை,தர்பூசணி, சாத்துக்குடி, போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தை தவிர்த்துவிடவும்.

புதன் - நார்ச்சத்து

காலையில் எழுந்ததும் வாக்கிங் போகவும். அதன் பின் நாள் முழுவதும் காய்கறிகளை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவும்.  காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற நார்ச்சத்து மிக்க காய்கறிகள் மிகவும் நல்லது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்கவும். உடல் சுத்தமாகும்.

வியாழன் - கால்ஷியம்

நாலாவது நாளில் உடம்புக்கு நிச்சயம் கால்ஷியம் சத்துத் தேவைப்படும். இரண்டு க்ளாஸ் பால் மற்றும் கொஞ்சம் பாலாடைக்கட்டி எடுத்துக் கொள்ளலாம். இன்று வாழைப்பழத்தை நிச்சயம் சாப்பிடவும். இது உடல் சக்தியை அதிகரிக்க உதவும். கொழுப்பு நீக்கப்படாத பால் குடிக்க வேண்டாம், அதற்குப் பதில் செறிவூட்டப்பட்ட பால் நல்லது.

வெள்ளி - மாவுச் சத்து

ஐந்தாவது நாளில் உடல் இப்போது எடையற்று இருப்பதைப் போலத் தோன்றும். மெலிவதற்கான அறிகுறிகள் தென்படும். இப்போது ப்ரவுன் ரைஸ் மற்றும் சத்தான காய்கறிகளைச் சாப்பிடலாம். மதிய உணவாக இதைச் சாப்பிட்டு மற்ற வேளைகளில் அல்லது பசிக்கும் போது காய்கறிகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

சனி - புரதச் சத்து

புரதச் சத்துமிக்க கோழி இறைச்சி, மீன், முட்டை, பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள் போன்றவற்றை இன்றைய தினம் மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிடலாம். ஆனால் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வதை மறக்கக் கூடாது.

ஞாயிறு -இறுதி நாள்

கொஞ்சம் ப்ரவுன் ரைஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடவும்.

இப்போது உடல் ஓரளவு இளைத்திருக்கும். ஆனால் இது முதல் படிநிலை மட்டும் தான். இதற்கு பின் மேலும் இளைக்க, தொடர்ந்து வாக்கிங், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றைக் கடைப்பிடித்து வெயிட் லெஸ்சாக இருக்கவும். முக்கியமாக ஒரு டயட்டீஷியனை அணுகி உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுப் பரிந்துரையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com