இன்றைய மருத்துவ சிந்தனை: கொடிப் பசலைக் கீரை

தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: கொடிப் பசலைக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


கொடிப் பசலைக் கீரை:

  • கொடிப் பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.
  • கொடிப் பசலைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து ஊலர்த்திப் பொடியாக்கி , பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • கொடிப் பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.
  • கொடிப் பசலைக் கீரையுடன் விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம் , கட்டிகள் போன்றவை கரையும்.
  • கொடிப் பசலைக் கீரை , கொத்தமல்லி விதை , சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • கொடிப் பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால்  தீராத தாகமும் தீரும்.
  • கொடிப் பசலைக் கீரையை உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் , உடல் சூடு , வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

KOVAI  HERBAL CARE

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com