இன்றைய மருத்துவ சிந்தனை: தண்ணீர்விட்டான் கிழங்கு

குழந்தைப்பேறு உண்டாகும்
இன்றைய மருத்துவ சிந்தனை: தண்ணீர்விட்டான் கிழங்கு

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


தண்ணீர்விட்டான் கிழங்கு:

  • தண்ணீர்விட்டான் கிழங்கு , நெருஞ்சில் இவை இரண்டையும் பாலில் போட்டு வேகவைத்து உலர்த்திப் பொடி செய்து , தினமும் ஐந்து கிராம் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் , குழந்தைப்பேறு உண்டாகும்.
  • தண்ணீர்விட்டான் கிழங்கை பால் சேர்த்து அரைத்துக் காயவைத்துப் பொடி செய்து , தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால்  நீரிழிவு குணமாகும்.
  • தண்ணீர்விட்டான் கிழங்கு , பூனைக்காலி விதை , நெருஞ்சில் , அமுக்கரா , சாலாமிசிரி இவை அனைத்திலும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து 5 கிராம் வீதம் காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து குடித்துவந்தால் ஆண்மைக்குறைவு , நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • தண்ணீர்விட்டான் கிழங்கு , சுக்கு , மிளகு , திப்பிலி இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் இரண்டு வேளையும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.
  • மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
  • கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com