இன்றைய மருத்துவ சிந்தனை: முடக்கத்தான் கீரை

தாமதித்த மாதவிலக்கு குணமாகும்
  இன்றைய மருத்துவ சிந்தனை: முடக்கத்தான் கீரை


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

முடக்கத்தான் கீரை:

  • முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தடைபட்ட  மற்றும் தாமதித்த மாதவிலக்கு குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையுடன் கடுக்காயைத்  தட்டிப்போட்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் மூல நோய்கள் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரைச் சாற்றில் மஞ்சள் தூள் (சிறிதளவு)  கலந்து சொரி, படை , சிரங்குகள் மீது பூசினால் குணம் பெறலாம்.
  • முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றோடு பூண்டு(2பல்),மஞ்சள் தூள்(2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான மூட்டு வலிகளும் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கத்தைச் சேர்த்து அரைத்து, இரவு உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையில் சாறு எடுத்து லேசாகச் சூடுபடுத்தி காதில் சில துளிகளை விட்டால் காது வலி குணமாகும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com