இன்றைய மருத்துவ சிந்தனை: கல்யாண முருங்கை

ரத்த சோகை குணமாகும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: கல்யாண முருங்கை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

கல்யாண முருங்கை:

  • கல்யாண முருங்கை , முருங்கை இலை ,மிளகு  , பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
     
  • கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
     
  • கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால், அதிகாலையில் மலம் தாராளமாக வெளியேறும்.
     
  • கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
     
  • கல்யாண முருங்கை இலையுடன், ஊறவைத்த வெந்தயத்தை ஓரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு, வெள்ளைப்படுதல், வெட்டைச் சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
     
  • கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com