உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதையெல்லாம் குடித்து பாருங்கள்!

உங்கள் உடல் எடையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தினமும்
உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதையெல்லாம் குடித்து பாருங்கள்!

உங்கள் உடல் எடையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தினமும் காலையில் பருகுங்கள். 

எருமைப் பால்

ஒரு தம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் காலை ஒரு தம்ளர் இரவில் ஒரு தம்ளர் எருமைப் பால் பருகி வந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும்.

பாதாம் பால்

சிலருக்கு எருமைப் பால் பிடிக்காது. அவர்கள் ஹாட் சாக்லேட் அல்லது பாதாம் பால் பருகலாம். ஒரு தம்ளர் பாதாம் பாலில் 158 கலோரிகள் உள்ளது. உடல் எடையை அதிகரிக்கச் செய்ய தினமும் இரண்டு தம்ளர் பாதாம் பால் குடித்தால் கணிசமான அளவில் உடல் எடை அதிகரிக்கும்.

சத்து மாவு கஞ்சி

ஒரு தம்ளர் நவதானிய சத்துமாவு கஞ்சியில் குறைந்தது 300 கலோரிகளாவது இருக்கும். இது நீங்கள் சேர்க்கும் தானியத்துக்கு ஏற்றாற்போல் மாறுபடும். நவதானிய சத்துமாவைத் தயாரிக்க தேவைப்படும் தானியங்கள் கேழ்வரகு, சாமை, வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, கோதுமை, சோளம் மற்றும் ஓட்ஸ். சுவைக்காகவும் மேலும் சத்துக்கள் தேவை எனில் முந்திரி, பாதாம், ஜவ்வரிசி போன்றவற்ற

லஸ்ஸி

லஸ்ஸியில் 159 கலோரிகள் உள்ளது. லஸ்ஸி மிகவும் சுவையும் சத்தும் நிறைந்த பானம். இது ப்ரோபயாடிக் சத்துக்கள் நிறைந்தது. கெட்டியான தயிரில் சர்க்கரை சேர்த்து செய்யப்படுவது. இந்த பானத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும். 

ஸ்மூத்தி

ஒரு தம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் உள்ளன. இதில் ப்ரோட்டீன் சத்து அதிகம் உள்ளது. தவிர கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்ய இதை தினமும் குடிக்கலாம்.

பழரசம்

ஒரு தம்ளர் பழரசத்தில் 200-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். அந்தந்த பழங்களுக்கு ஏற்றபடி கலோரி மாறுபடும். பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால்தான் அதன் முழுப்பலனைப் பெற முடியும். பழரசமாகத் தயாரித்துப் பருகுகையில், அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்ப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.  எந்தவகை ஜூஸானாலும் அதை அதிகாலையில் குடித்தால் உடல் எடை நன்கு அதிகரிக்கும். 

மாம்பழ மில்க் ஷேக்

மாம்பழத்தில் 130 கலோரிகள் உள்ளது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், மாம்பழத்தையும் பாலையும் ஒன்றாகப் பருகுங்கள். ஒரு தம்ளர் மாம்பழ மில்க் ஷேக்கில் அந்தளவுக்கு கலோரிகள் அதிகம். மாம்பழம் தவிர்த்து ஆப்பிள், சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கும் உடல் எடை அதிகரிக்க உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com