ஜில்லென்று ஒரு ஃபலூடா செய்வது எப்படி?

சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். அதுவும் இந்தக் கோடையை சமாளிக்க
ஜில்லென்று ஒரு ஃபலூடா செய்வது எப்படி?

சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். அதுவும் இந்தக் கோடையை சமாளிக்க இயற்கையாக நம் வீட்டில் தயாரித்த பழரசங்கள் குடித்து உடலை குளுமையாக வைத்துக் கொள்ள எளிமையான ரெசிபி இதோ :

ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:

பால் - அரை லிட்டர்
ஓரம் நீக்கப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ் - 2
சர்க்கரை - அரை கப்
எசன்ஸ் - அரை தேக்கரண்டி

(அல்லது கடையில் விற்கும் ஐஸ்க்ரீம் 2 கப் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்)

ஃபலூடாவிற்கு தேவையான பொருட்கள்:

ஊற வைத்த சேமியா - ஒரு கப்
ஜெல்லி - ஒரு கப் (ஜெல்லி செய்முறை அதன் டப்பாவிலேயே எழுதி இருக்கும்)
நறுக்கிய மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழை, திராட்சை - 2 கப்
ட்ரை ஃப்ரூட்ஸ் - கால் கப்
செர்ரி பழம் - 5

ஐஸ்கிரீம் செய்முறை:

பாலை சுண்ட காய்ச்சவும். சூடான பாலில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு அப்படியே மூடி ஆற விடவும்.

பால் ஆறியதும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

இந்த கலவைவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைக்கவும்.

இப்போது ஐஸ்க்ரீமை எடுத்து எசன்ஸை கலந்து மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

நன்றாக கலந்து மிருதுவானதும் கிண்ணத்தில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விடவும்.

5 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்போது ஐஸ்க்ரீம் ரெடியாகி விட்டது.

ஒரு நீளமான கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் முதலில் ஒரு கரண்டி ஊற வைத்த சேமியாவை போடவும்.

அடுத்து கருப்பு திராட்சை, அதன்மேல் மாம்பழம், அடுத்து சிகப்பு கலர் ஜெல்லி, இப்ப கொஞ்சம் ஐஸ்க்ரிம், அதன் மேல் மற்ற பழ வகைகள் போடவும்.

கடைசியாக சிறிது ஐஸ்க்ரீமை வைத்து அதன் மேல் ட்ரை ஃப்ரூட்ஸை தூவி மேலே ஒரு செர்ரி பழத்தை வைத்து அலங்கரித்து கொடுங்கள்.

- மாலதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com