இன்றைய மருத்துவ சிந்தனை: முருங்கைப் பூ

நினைவாற்றல் அதிகரிக்கும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: முருங்கைப் பூ

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


முருங்கைப் பூ:

  • முருங்கைப் பூவுடன் (ஒரு கைப்பிடி) பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
  • முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தினந்தோறும் காலை மாலை என இருவேளையும் 5 கிராம் வீதம் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
  • முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி , பித்த தன்மை அதிகமானால் ஏற்படும் தலைவலி போன்றவை குணமாகும்.
  • முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து  அதனால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும்.
  • முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் சில பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி போன்ற பிரச்சனைகள் குறையும்.
  • முருங்கைப் பூவை (ஒரு கைப்பிடி) எடுத்து சுத்தமாக ஆய்ந்து நன்றாக கழுவி பசும் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு தூள் போட்டுக் கலக்கி மாலை 6 மணிக்கு சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெற்று விந்து உற்பத்தி அதிகரிக்கும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com