இன்றைய மருத்துவ சிந்தனை: வசம்பு

நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் ஆகியன தீரும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: வசம்பு

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


வசம்பு:

  • வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம் அல்லது வசம்பைச் சுட்டு கரியாக்கி 100 மி.கி. அளவு, 1 பாலாடை அளவு தாய்ப்பாலில் கலக்கி உள்ளுக்குள் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
  • வசம்பை விளக்குத் தீயில் சுட்டு அவற்றை தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் ஆகியன தீரும்.
  • வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு , சீரகம் இவ்வைந்தையும்  தேவையான அளவு எடுத்து கஷாயம் செய்து அதனுடன்  பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் சிறுநீரகக் கோளாறுகள்  அனைத்தும் நீங்கும்.
  • வசம்பு சிறிதளவு எடுத்து அதனுடன் இரண்டு வெற்றிலை சேர்த்து மென்று தின்று உடனே இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிறு உப்புசம் குணமாகும்.
  • வசம்புத்தூளை எலுமிச்சைச் சாறில் கலந்து குடித்து வந்தால் கடுமையான  வாந்தி உடனே நிற்கும்.
  • வசம்புத்தூள் (சிறிதளவு) அதனுடன் ஒரு செவ்வாழை பழத்தை சேர்த்து சாப்பிட்டுவந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
  • வசம்புடன் வல்லாரை இலையை வைத்து அரைத்து தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com