இன்றைய மருத்துவ சிந்தனை: பரட்டைக் கீரை

வாயுக் கோளாறு, பெரு வயிறு குறைய பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு குணமாகும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: பரட்டைக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • சளி, இருமல் குணமாக பரட்டைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து அவற்றில் சுக்கை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.
  • வாயுக் கோளாறு, பெரு வயிறு குறைய பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு குணமாகும்.
  • கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாக பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்துவந்தால் கை, கால், இடுப்பு,மூட்டு வலிகள் குணமாகும்.
  • மூச்சிரைப்பு குணமாக பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2கிராம் அளவுக்கு எடுத்து  காலை,மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
  • மலச் சிக்கல் பிரச்சனை தீர பரட்டைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, இரவில் அரை ஸ்பூன் அளவு  எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
  • சொறி, சிரங்கு, படை குணமாக பரட்டைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி பயன்படுத்தி வந்தால் படை, சொறி,சிரங்கு போன்றவை குணமாகும்.
  • குறிப்பு : பரட்டைக் கீரை குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com