இன்றைய மருத்துவ சிந்தனை: மிளகாய் / மிளகாய் வற்றல்

வலி மற்றும் வீக்கம் குறைய
இன்றைய மருத்துவ சிந்தனை: மிளகாய் / மிளகாய் வற்றல்


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


மிளகாய் / மிளகாய் வற்றல்:

  • வலி மற்றும் வீக்கம் குறைய மிளகாய் (4), பூண்டு (4 பல்), மிளகு(10), மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து தடவினால்   வலி , வீக்கம் போன்றவை குணமாகும்.
  • அஜீரணக் கோளாறுகள் நீங்க மிளகாயை (3)அரிந்து , சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் காய்ச்சி மூன்று நாள்களுக்குக் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு , வயிற்று நோய் குணமாகும்.
  • பச்சை மிளகாய் (2) , வெல்லம் (சிறிதளவு) , புளி (சிறிதளவு) இவை மூன்றையும் சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறுகள் வராது.
  • காது வலி , காது குத்தல் நீங்க சிறிது நல்லெண்ணெயில் விதை நீக்கிய மிளகாயைப் போட்டு சூடாக்கி ஆறிய பிறகு , காதில் இரண்டு துளிகள் எண்ணெய் விட்டால் காது வலி , காது குத்தல் போன்றவை தீரும்.
  • வயிறு உப்புசம் நீங்க மிளகாய்வற்றல் (ஓன்று) , புளி (சுண்டைக்காய் அளவு) இவை இரண்டையும் நன்றாக அரைத்து மூன்று நாள்களுக்கு காலை மாலை என இருவேளை சாப்பிட்டுவந்தால் வயிற்று உப்புசம் தீரும்.
  • மாதவிலக்கின் போது ஏற்படும் வலி நீங்க மிளகாய்வற்றல் (ஒன்று) , பூண்டு (2பல்) , இவை இரண்டையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் சூதகவலி குணமாகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com