இன்றைய மருத்துவ சிந்தனை: வெள்ளரிக்காய்

வயிற்றுப் புண் குணமாக
இன்றைய மருத்துவ சிந்தனை: வெள்ளரிக்காய்


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


வெள்ளரிக்காய்:

  • வயிற்றுப் புண் குணமாக வெள்ளரிக்காய் நறுக்கி சாறு எடுத்து வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அரைடம்ளர் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தி வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
  • உயர் ரத்த அழுத்தம் குறைய தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • உடல் பருமன் , ஊளைச் சதை குறைய வெள்ளரிக்காய் , வெள்ளை வெங்காயம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாறு எடுத்து  அவற்றை சாறு பிழிந்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் , ஊளைச் சதை குறையும்.
  • சிறுநீரகக் கற்கள் கரைய வெள்ளரிகாய் , முள்ளங்கி , வாழைத்தண்டு  இவை மூன்றையும் சம அளவு  எடுத்து அரைத்து சாறு எடுத்துக் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் . நீர் அடைப்பு , நீர்க் கட்டு போன்ற குறைபாடுகள் நீங்கும்.
  • முடி நன்கு வளர முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், சல்ஃபரும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.  வெள்ளரிக்காய் சாற்றுடன்  காரட்சாறு (2 ஸ்பூன்) , பசலைக்கீரைச்சாறு (2 ஸ்பூன்) , போன்றவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
  • காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில்தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துவும்.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசி வந்தால் முகம் அழகு பெறும்.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாகும் . பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றி வந்தால் முகம் அழகு பெறும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com