இன்றைய மருத்துவ சிந்தனை: சீரகம்

உடல் சூடு , வயிற்று வலி மறைய
இன்றைய மருத்துவ சிந்தனை: சீரகம்


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


சீரகம்:

  • உடல் சூடு , வயிற்று வலி மறைய சீரகத்தைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டால் உண்டாகும் வயிற்று வலி குணமாகும்.
  • பித்தம் குறைய, இளநரை மறைய சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , பித்தம் குறையும் , இளநரை மறையும்.
  • நன்றாகத் தூக்கம் வர சீரகம் , ஒமம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு படுக்கப் போகும் முன் குளித்து விட்டு படுத்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
  • குளிர்க் காய்ச்சல் உடனே குணமாக சீரகம் , குருந்தொட்டி வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு கஷாயமாக  காய்ச்சி மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் குளிர்க் காய்ச்சல் உடனே குணமாகும்.
  • உடல் பருமன் குறைய சீரகம் , சோம்பு , வாய்விளங்கம் , ரோஜாப்பூ இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும் , இதில் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , உடல் பருமன் குறையும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com