இன்றைய மருத்துவ சிந்தனை: கரிசலாங்கண்ணிக் கீரை

இன்றைய மருத்துவ சிந்தனை: கரிசலாங்கண்ணிக் கீரை

இளநரை மறைய 


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


கரிசலாங்கண்ணிக் கீரை:

  • தலைவலி குணமாக கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.
  • பித்தப்பை கற்கள் கரைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு எடுத்து , அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்குத் தொடர்ந்து குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் கரையும்.
  • வாய்ப்புண் குணமாக கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் (30 மில்லி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
  • இளநரை மறைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் நெல்லிமுள்ளி , சீரகம்  இரண்டையும் சம அளவு எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
  • ஆரம்பநிலை புற்றுநோய் குணமாக கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு (30மில்லி), பருப்புக் கீரை சாறு (30 மில்லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.
  • மூச்சிரைப்பு குணமாக கரிசலாங்கண்ணிங் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலையில் இரண்டு  கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு குணமாகும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com