நச்சுக்கொட்டைக் கீரை

இன்றைய மருத்துவ சிந்தனை: நச்சுக் கொட்டைக் கீரை (சண்டிக் கீரை)
நச்சுக்கொட்டைக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை: நச்சுக் கொட்டைக் கீரை (சண்டிக் கீரை)

  • வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்க நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு , சீரகம், பூண்டு, வெங்காயம் ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் , வாதத்தினால் ஏற்படக்கூடிய வலிகள் அனைத்தும் தீரும்.
  • உடல் பருமன் குறைய நச்சுக்கொட்டைக் கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் பாதி அளவு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
  • கழுத்து வலி , இடுப்பு வலி குணமாக நச்சுக்கொட்டைக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்கள் வேகவைத்து  சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி , கழுத்து வலி குணமாகும்.
  • சிறுநீர் நன்றாக வெளியேற நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சீராக  வெளியேறும்.
  • பாசிப்பருப்பை  வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி பின்பு நச்சுக்கொட்டைக் கீரையையும் ,  வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து மறுபடியும்  நன்கு வேகவைத்து  மதிய உணவுடன் சாப்பிட்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும்.
  • குடற்புண்கள் ஆற நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து , பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடற்புண்கள் ஆறும்.

KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com