இன்றைய மருத்துவ சிந்தனை: செம்பருத்தி

இரத்தச் சோகை
இன்றைய மருத்துவ சிந்தனை: செம்பருத்தி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • இரத்தச் சோகை குணமாக செம்பருத்தி பூவை காயவைத்து அரைத்து (100 கிராம்) , மருதம் பட்டைத் தூள் (100 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
  • சிறுநீர் எரிச்சல் குணமாக செம்பருத்திப் பூ (10 இதழ்களை) நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து காய்ச்சி வைத்துக்கொண்டு அந்த நீரை கொஞாசம் கொஞாசமாக குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்
  • தலைச் சுற்றல் , மயக்கம் குணமாக செம்பருத்திப் பூவுடன் (2) , சீரகம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் வரக்கூடிய மயக்கம் , தலைச்சுற்றல் , ரத்த அழுத்தம்  போன்றவை குணமாகும்.
  • இரத்தம் சுத்தம் அடைய செம்பருத்திப் பூவுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்தச் சுத்தி உண்டாகும். தோல் நோய்களும் குணமாகும்.
  • பேன், பொடுகுத் தொல்லை தீர செம்பருத்திப் பூக்களை எடுத்து இரவு படுக்கும் போது தலையில் வைத்துப் படுத்துக் கொண்டால் பேன், பொடுகுத் தொல்லை தீரும்.
  • மாதவிடாய் வயிற்று வலி குணமாக செம்பருத்தி மொட்டை எடுத்து மாதவிடாய் நாட்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
  • மாதவிலக்கு ஒழுங்காக செம்பருத்திப் பூக்களை (3) ,எலுமிச்சம் பழத் தோலுடன் அரைத்து  காலை வேளை வெறும் வயிற்றில்  சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு ஒழுங்காகும்.

KOVAI  HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com