மன நலம் காப்போம் 5

எங்கள் மூத்த மகன் (வயது-13) ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள்
மன நலம் காப்போம் 5


எங்கள் மூத்த மகன் (வயது-13) ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இது இளைய மகனுக்கும் (வயது -10) பரவுமா..? ஆட்டிசம் நோயின் அறிகுறிகள் என்ன..? எவ்வாறு கண்டுபிடிப்பது..? குணப்படுத்துவது..? 
- வாசகர், சேலம்.

ஆட்டிசம் நோய் என்பது 13 வயதில் பாதிக்கக்கூடியதல்ல; இரண்டு அல்லது மூன்று வயதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவேளை, அதை நீங்கள் தாமதமாக உணர்ந்து அறிந்திருக்கலாம். 10 வயது மகனுக்குப் பரவுமா என்று கேட்டிருக்கிறீர்கள். இது பரவக்கூடியது அல்ல! ஆட்டிசம் என்பது மதியிறுக்க நோய். இது மூளையின் முக்கிய செயல்பாடுகளான பேச்சுத்திறன், சமுதாயத் தொடர்பு மற்றும் புலன் உணர்வுகளை பாதிக்கும் ஒரு வளர்ச்சி குறைவு நோயாகும். இந்த நோய் பாதித்த ஒவ்வொருவரும் வேறுபடுவர். குழந்தைகள் வளரும்போதே இதை அறிய முடியும். வளர்ந்த பிறகு அல்ல. 

என் வயது 30. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு நண்பர்களே இல்லை. யாருடன் பழகினாலும் சீக்கிரம் பிரிந்து விடுவார்கள். என் மனைவி உள்பட என்னைப் புரிந்து கொள்ள இந்த உலகத்தில் யாருமே இல்லை என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த விரக்தி மனப்பான்மையிலிருந்து நான் மீள்வது எப்படி?
- பாலன், நாகர்கோவில்.

மற்றவர்களுடன் நமக்கு கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்பு. ஆனால், அக்கருத்து வேறுபாடு தொடர்ந்து எல்லாரிடமும் ஏற்பட்டால் அது பிரச்னைதான். அதை முதலில் ஆராய்தல் வேண்டும். எந்த சமயத்தில், எந்த சூழ்நிலையில் அவ்வாறு தொடர்ந்து நடக்கிறது என்பதை அறிந்து, அச்செயலினை மாற்றுதல் அவசியம். இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள்:

மற்றவர்களை அதிகமாக சார்ந்து இருப்பது. உங்களுடைய தனித்தன்மையை நீங்கள் அறியாமல் பிறரை மிகவும் நாடுதல். நீங்கள் மற்றவர்களிடம் மிகவும் எதிர்பார்ப்புடன் பழகுவதும் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

உங்கள் தன்னம்பிக்கையை வலிமையாக மாற்றும் முறைகள்:

முதலில் உங்களை நீங்களே நேசித்தலும், பாராட்டுதலும் மிகவும் தேவையானது. பின்பற்றக்கூடிய SWOT Analysis வலிமை (Strength)  அறிதல், பலவீனம் (Weakness) அறிதல், வாய்ப்புகளை (Opportunity) அறிதல், அச்சுறுத்தல் (Threat வெளிப்படுத்துவதிலும், பிறரின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேசுவதிலும் கவனம் வேண்டும்.

எங்கள் குழந்தை அர்ஜுனுக்கு நான்கு வயது ஆகிறது எல்.கே.ஜி. படிக்கிறான். மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தை. அவன் செயல்பாடுகள், புரிந்துக் கொள்ளும் தன்மை நன்றாக உள்ளது. ஆனால் பேசும் திறன் மட்டும் சரிவரவில்லை. வாரம் இரு நாள்கள் பழனி அருகே உள்ள ஆயக்குடிக்கு அழைத்துச் சென்று பேச்சுப்பயிற்சி  அளித்து வருகிறோம். அவன் பேசும் திறன் பெறுவதற்கு ஆலோசனை தாருங்கள்!
- எஸ்.புவனேஸ்வரி, திண்டுக்கல்

மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட பல காரணங்கள் உண்டு. நீங்கள் உங்களின் குழந்தை மூளை வளர்ச்சிக் குறைபாட்டுடன் இருக்கிறது என்று கூறினீர்கள். ஆனால்,  அக்குழந்தையின் அறிவு ஆற்றலின் அளவு எவ்வளவு? அதை யாரேனும் மருத்துவரிடம், மனநல ஆலோசகரிடம் பரிசோதனை செய்தீர்களா? அவ்வாறு பரிசோதனை செய்வது மிகவும் முக்கியம். அவ்வாறு அளவு தெரிவதன் மூலம் நீங்கள் பயிற்சியையும், பயிற்சி அளித்தலின் முறையையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி விழிப்புணர்வுடன் பேச்சு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளீர்கள். மற்ற குழந்தைகளிடம் காணப்படும் சமமான வளர்ச்சியை இக்குழந்தையிடம் உங்களால் காண இயலாது. அவ்வாறு எதிர்பார்ப்புகள் இருப்பின், உங்களுக்கு ஏமாற்றத்தைதான் தரும். எனவே,  இப்பயிற்சியின் பலன் உங்களுக்கு மெதுவாகத்தான் தெரியும். அதற்கு சிறிது காலம்  பொறுமையாக இருத்தல் அவசியம். குழந்தையின் பேச்சுத்திறனுக்கான பயிற்சிகள் சிலவற்றினை இங்கு குறிப்பிடுகிறேன்:

குழந்தைகளுக்கு படங்களைக் காட்டி உச்சரித்தலும் பயிற்சியளித்தல் வேண்டும்.

வண்ணங்களையும், பலப் பொருட்களையும், சுட்டிக்காட்டி உச்சரித்தல் (நாவை நன்றாக அசைத்தல்) சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையிடம் நன்றாக பேசுங்கள், அதனின் தேவைகளை வெளிப்படுத்த ஓரிரு  வார்த்தைகளை முதலில் சொல்லித் தர வேண்டும். அதன் முயற்சிக்கு  நல்ல  பாராட்டு அளித்தல் வேண்டும்.

அவனைப் போன்ற பல குழந்தைகளுடனும், பலரிடமும் பழக விடுவது முக்கியம். அப்பொழுது அவன் பேச முயல்வான்.

உங்களுடைய சவுகரியத்துக்கு ஏற்றவாறு மருத்துவரிடம் அன்றாடம் ஆலோசனையுடன் செயல்படுங்கள்.

குழந்தைக்கு  வளர்ச்சி அடைய மெழுகு ஊதுவது, உறியும் குழல் (ஸ்ட்ரா) போன்ற பயிற்சி அளிக்கலாம்.
(பதில்கள் தொடரும்)
-ரவிவர்மா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com