உற்சாகத்தில் மதி மயங்காதே

நாம் ஒரு செயலை செய்து முடித்தபிறகு, நம்மை உற்சாகப்படுத்தினால் தான் நம்முடைய
உற்சாகத்தில் மதி மயங்காதே

நாம் ஒரு செயலை செய்து முடித்தபிறகு, நம்மை உற்சாகப்படுத்தினால் தான் நம்முடைய  செய்கையில் ஒரு உத்வேகம் பிறக்கும், மேலும் செய்வதற்கு ஆர்வம் தலை தூக்கும். இது இயற்கையான மனித சுபாவம்தான். தவறில்லை.

ஆனால், நாம் ஒரு காரியத்தை செய்து முடித்துவிட்ட பிறகு உற்சாகப்படுத்தும் நண்பர்களின் செயலில், உண்மையான எண்ணம் இருக்கிறதா என்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தவறான செயலுக்கு பக்கபலம் இருந்து அதை தூண்டும் வகையில் ஊக்கம் இருந்தால் விலக்கப்படவேண்டும்.

தன்னுடைய இயற்கையான திறமையே தன்னுடைய வாழ் நாளுக்கு முத்தாய்ப்பான  ஒரு சுவாரஸ்யமான கதையினை கூறப் போகிறேன்.

முட்டையிலிருந்து வெளிவந்த கொசு ஒன்று பறக்கும் நிலைக்குத் தயாராக இருந்தது. தன்னுடைய இறக்கையினை படபடவென்று அடித்துக் கொண்டது.

மெதுவாக அங்கும் இங்கும் பறந்து பறந்து தன்னுடைய சந்தோஷத்தினை வெளிக் காண்பித்தது.

'அம்மா, அம்மா, என்னைப்  பாரேன். எப்படி பறக்கிறேன் என்று. நான் பறப்பதைக் கண்டு எத்தனை பேர்கள் கையைத் தட்டுகிறார்கள் பார்த்தாயா? நான் என்னும் வேகமாய்ப் பறக்கப் போகிறேன்' என்றது குழந்தைக் கொசு.

'அட பைத்தியமே. அவர்கள் நீ பறப்பதைப் பார்த்து கையைத் தட்டவில்லை. அவர்கள் கைகளுக்குள் உன்னை சிக்க வைக்கப் பார்கிறார்கள். ஒரு இடத்தில் அமைதியாகப் போய் உட்கார்' என்றது அம்மா கொசு.

ஆனால் குழந்தைக் கொசு கேட்கவில்லை அம்மாவுக்குப் பொறாமை என்று நினைத்துக் கொண்டு தன்னிச்சையாக நடந்து கொண்டது.

அம்மா கொசு, கவலை கொண்டது, நல்லது எது கெட்டது எது என்று அறிந்து கொள்ளும் பக்குவம் வராத நிலையில்,  
ஒருவரின் கைகளில் சிக்கி உயிரை விட்டது.

சிறு வயதில் அனுபவமில்லாத விஷயத்தில், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையில், எந்த விதமான நஷ்டம் உண்டாகும் என்று தெரியாது. போலியைக் கண்டு அதுதான் உண்மை என்று ஏமாந்து போக வேண்டாம்.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com