இளைஞர்களை அலைக்கழிக்கும் இன்ஸ்டாக்ராம்!

சமூக வலைத்தளங்களில் சுத்த மோசம் என ஒன்றை சுட்டிக் காட்டினால் அது நிச்சயம்
இளைஞர்களை அலைக்கழிக்கும் இன்ஸ்டாக்ராம்!

சமூக வலைத்தளங்களிலேயே ஆக மோசம் என ஒன்றை சுட்டிக் காட்ட விரும்பினால், அது நிச்சயம் இன்ஸ்டாக்ராம் பயன்பாடுதான். இளம் வயதினர் பலருக்கு இரவுத் தூக்கம் இதைப் பயன்படுத்தாமல் இருந்தால் வராது. அந்தளவுக்கு இதனால் பலர் மனம் பாதிப்படைந்துள்ளனர் என்கிறது பிபிசி.

இந்த வாக்கெடுப்பை நடத்தியவர்கள் ராயல் சொசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த். இதற்காக 14 லிருந்து 24 வயதுக்குட்பட்ட 1,479 இளைஞர்களை வரவழைத்தனர். அவர்களிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. யூட்யூப், இன்ஸ்டாக்ராம், ஸ்னாப்சாட், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடுகள் குறித்து பேசினார்கள். அவர்களிடம் ஒவ்வொரு பிரிவிலும் 14 மார்க்குகள் வாங்கும்படி அறிவுறுத்தபட்டது.

இந்த ஒப்பீட்டில் மனநலனைப் பொருத்தவரையில் யூட்யூப் மட்டுமே ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதற்கு அடுத்ததாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இருந்தது. ஆனால் ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாக்ராம் இரண்டுமே மோசமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளம் இளைஞர்களை கடுமையான மன அழுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகிறது பிபிசி என்று பதிவு செய்தது.  இணையதளங்களை நல்லவற்றுக்கும் பயன்படுத்த முடியும் ஆனால் கட்டற்ற சுதந்திரமும் விரல் நுனித் தகவல்களும் அவர்களை தீயவற்றுக்கு எளிதில் நெருங்கும்படியாக்கிவிடுகிறது. எனவே இணைய நிறுவனங்கள் தங்களின் தளங்களின் பாதுகாப்பு முறைகளை மேலும் பலப்படுத்தவேண்டும் என்றும் கூறுயது. இணையப் பயனாளர்களில் 90 சதவிகிதத்தினர் இளம் வயதினர்தான். அவர்களுக்கு எது சரி எது தவறு என்று பகுத்து உணர முடியாத வயது. ஆர்வக் கோளாறு மிகுந்து இருக்கும் அந்தக் காலகட்டத்தில் இணையத்தின் வழியே அவர்களுக்கு கிடைக்கும் பல தவறான விஷயங்கள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை பாதித்துவிடுகிறது. சுயமோகம் அதிரித்து அடுத்தவர்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி இருப்பார்கள். இதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால் நல்லது. பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் சமூகத்தினரும் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவுகள் பல சமூக சீர்கேடுகளுக்கு வித்திடும் என்று வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com