மாடர்ன் இந்தியாவின் வைட்டமின் 'டி' டைலம்மா

நீங்கள்  மால்களுக்கு ஷாப்பிங்  செல்கிறீர்கள்...
மாடர்ன் இந்தியாவின் வைட்டமின் 'டி' டைலம்மா

நீங்கள்  மால்களுக்கு ஷாப்பிங்  செல்கிறீர்கள்...

படம்பார்க்க மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களுக்குச் செல்கிறீர்கள்...

பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 5  ஆம் மாடியில் இருக்கும் உங்களது அலுவலகத்திற்கு செல்கிறீர்கள்...

மேலே சொல்லப் பட்ட அத்தனை இடங்களிலும் பத்துக்குட்பட்ட மாடிகளும் அதற்கு லிப்ட் வசதியும் இருக்கக் கூடும்.

உங்களில் எத்தனை பேர் லிப்ட் வசதியைப் புறக்கணித்து விட்டு நடந்தே மாடி ஏறி நீங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வீர்கள் என்று உங்களுக்குள் கேள்வி கேட்டு பதில் பெற முயற்சியுங்கள்.

அவ்வளவு ஏன் பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உங்கள்  வீட்டுக்குச் செல்ல ஆட்டோவை அணுகாமல் தயக்கமின்றி எத்தனை பேர் நடந்தே வேட்டுக்குப் போகத் தயார் என்று ஒரு சர்வே எடுங்கள். நடந்து செல்லத் தயாராக இருப்பவர்களில் இன்றைய மாடர்ன் இளைஞர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகத் தான் இருக்கும். அதே சமயம் நமக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய பாட்டி தாத்தாக்களைப் பாருங்கள் பலரும் இன்றைக்கும் கூட சுறுசுறுப்பாக இருப்பார்கள். அன்றைய தலைமுறையினருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் உடல் வலுவில் ஏன் இப்படி ஒரு வேறுபாடு என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யோசித்திருப்பீர்கள் எனில் உங்களுக்கு மாடர்ன் இந்தியாவின் இந்த வைட்டமின் "டி"டைலம்மாவைப் பற்றி தெரிந்திருக்கும்.

இந்தப்பிரச்சினைக்கு முதல் காரணம் எலும்புகளின் வலுவற்ற தன்மை. இதன் பின்னணிக் காரணங்களை கொஞ்சம் ஆராய்வோமா?

உலக வரைபடத்தில்  இந்தியாவைப் பார்த்திருப்பீகள். எப்படி இருக்கிறது இந்தியாவின் அமைப்பு? வட அட்சக் கோட்டிலிருந்து 8 .4  முதல் 37 .6  டிகிரி கோணத்தில் விலகி இருக்கிறது நமது இந்தியா. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் வருடம் முழுக்க சூரியனின் ஆளுமை  இருந்து கொண்டே இருக்கும், விவசாயமும் வேளாண்மையும்  இந்தியாவின் முக்கியத் தொழிலாக இருந்து வந்த பண்டைய காலங்களில் இந்தியர்கள் தங்களது சருமம் மற்றும் எலும்புகளின் ஆரோக்யத்துக்குத்  தேவையான வைட்டமின் "D " சத்துக்களை, தங்கள் வயல்களில் விதைப்பது, உழுவது, நாற்று  நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது என்று நாள் முழுதும் சூரியன் ஓயும் வரை அதன் கதிர்களை நேரடியாக தங்கள் உடல்களில் தாங்கி சூரியனிடமிருந்தே பெற்றுக் கொண்டார்கள், இதனால் அவர்களது நிறம் மங்கினாலும் கூட உடல் ஆரோக்கியம் மேம்பட்டது இப்படி சூரியனின் துணை கொண்டு சரும நோய்களை, எலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வென்றார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால் இன்று ?!

மாடர்ன் இந்தியாவில் இன்றைக்கு யார் விவசாயம் செய்கிறார்கள்? யார் வயலுக்குப்  போய் வெயில் காய்கிறார்கள்? குளிரூட்டப்பட்ட பூட்டிய அறைகளில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு உலகை அளக்கத்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு விருப்பம். அதனால் என்ன நஷ்டம் என்று கேட்கிறீர்களா? பெருத்த நஷ்டம் தான், நமது தோல்களுக்கும், எலும்புகளுக்கும் பெருத்த நஷ்டம். எலும்புகளின் சீரான வளர்ச்சிக்கும், உறுதியான தன்மைக்கும் மிக முக்கியமான காரணியான வைட்டமின் 'டி' தட்டுப்பாட்டினால் அதிக அளவில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வயது வித்தியாசமின்றி ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோ மலேசியா, ரிக்கட்ஸ் போன்ற எலும்பு நோய்களால் அவதிப்படும் நிலை பெருகி வருகிறது. இந்த நோய்களைக் களைவதற்கான ஒரே தீர்வு எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் 'டி' சத்துக்களின் தேவையை முழுமையாக்குவதே ஆகும்.

வருங்காலத்தில் மாடர்ன் இந்தியாவின் மிகப் பெரிய தலைவலியாக, சமூக மேம்பாட்டில்  தவிர்க்க முடியாத டைலம்மாவாக இந்தப்பிரச்சினை மாறும் முன் உடனடியாக நாம் செய்தே ஆக வேண்டிய விஷயம் ஒன்று உண்டெனில் அது வைட்டமின் 'டி' சத்துக்களை சரிவிகிதமாக நமது உடலுக்கு அளிப்பதே எனலாம்.

வைட்டமின் 'டி.டைலம்மாவை வெல்ல எளிய வழிகள்:

  • காலையிலும் மாலையிலும் இளம் சூடான வெயில் நேரத்தில் சூரியக்கதிர்கள் உடலில் படுமாறு வாக்கிங் செல்லலாம்.
  • பிறந்த குழந்தைகளுக்கு  நாள்தோறும் காலை இளம் வெயிலில் சூரியக் குளியல் நடத்தலாம் .
  • பால், முட்டை, கீரை வகைகள் போன்ற வைட்டமின் 'டி' நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com