சூயிங்கம் மெல்லுவதால் பற்கள் வெண்மையாகுமா?!

சூயிங்கம் மென்றதால் மாட்டின் பற்கள் வெண்மையாகப் பளீரிடுவதாக
சூயிங்கம் மெல்லுவதால் பற்கள் வெண்மையாகுமா?!

சூயிங்கம் மென்றதால் மாட்டின் பற்கள் வெண்மையாகப் பளீரிடுவதாக விளம்பரத்தில் காட்டுகிறார்கள். மாட்டுக்கே பற்கள் வெண்மையாகும் போது மனிதனுக்கு வெண்மையாகாதா என்ன?! என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரும் தானே?! இந்த சந்தேகத்தை போக்கிக் கொள்ள டென்டிஸ்ட்களின் பதில்கள் ஏதாவது கிடைக்குமா என்று இணையத்திலும் ஹெல்த் தொடர்பான புத்தகங்களிலும் தேடிப்பார்த்தோம். கிடைத்தது பதில்.

 சூயிங் கம்களிலும் இரண்டு வகைகள் உண்டாம்  .

  • வொயிட்டனர்கள் கலக்காத ரெகுலர் சூயிங் கம்கள் (பூமர்,பூபாலு,பிக் ஃபன் etc )
  • வொயிட்டனர் கலந்த சூயிங் கம்கள்  (ஆர்பிட்)

இந்த இரண்டு வகை சூயிங் கம்களில் வொயிட்டனர்கள் கலந்த வகை சூயிங் கம்களே பற்களை வெண்மையாக்க கூடியவை என்று நம்பத் தேவையில்லை. இந்த கம்களின் செயல்பாடு வாயில் எச்சில் சுரப்பை அதிகப்படுத்துவதோடு நின்று விடுகிறது. இந்த வேலையை செய்வதில் வொயிட்டனர்கள் கலந்த சூயிங் கம்கள் குழந்தைகள் ஆசையோடு மெல்லும் ரெகுலர் கம்கள் என்று வித்யாசம் எதுவும் இல்லை, இரண்டுமே ஒரே வேலையைத் தான் செய்கின்றன.

சூயிங் கம்களின் வேலை:

சூயிங் கம் மெல்லுவதால் எச்சில் அதிகமாகச் சுரக்கிறது, இதனால் நாம் உண்ணும் சிக்கன், மட்டன் போன்ற மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள், மற்றும்  காப்பி,டீ,ரெட் வைன் போன்றவற்றால் பற்களில் படியும் கரைகள் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. இதனால் பற்களின் கரை நீடிப்பதில்லை. இந்த வேலையை மட்டுமே சூயிங் கம்கள் செய்கின்றனவே தவிர பற்களை வெண்மையாக்குவதில் அவை பயன்படுவதில்லை என நியூ டெல்லியைச் சேர்ந்த பல் மருத்துவர் அணில் மகேந்திரு தெரிவித்துள்ளார்.

பற்களின் நிறம் பளீரிடும் வெண்மையில் ஜொலிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சூயிங் கம்களை நம்பத் தேவையில்லை அவரவர் டென்டிஸ்ட்டுகளை  அணுகி அவர்களது ஆலோசனையின் பேரில் பெராக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன  பெர் ஆக்சைடுகள் கலந்த செல்களைப் பயன்படுத்தலாமாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com