
புதுதில்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கான மாநிலங்களை உறுப்பினராக தமிழக பாஜக மூத்த தலைவவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, அதிகாரப்பூர்வமாக மாநிலங்களை உறுப்பினராக இல. கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இல. கணேசன் விரைவில் இடம்பெறுவார் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.