
''பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் மாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்'' என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியில் ஹிந்தி கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
மத்திய அரசின் நிகழ்ச்சிகளிலும், கொள்கைகளிலும் ஹிந்தி மொழியே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் தத்தம் மாநில மொழிகளுடன் சேர்த்து ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான சாதனம் ஹிந்தி மொழி ஆகும். தாய்மொழி வாயிலாக நமது உணர்வுகளை பிறருடன் எளிதில் பரிமாறிக் கொள்ள முடியும். இதை ஹிந்தியிலும் நிறைவேற்ற முடியும் என்றார் வெங்கய்ய நாயுடு.
தொடர்ந்து, அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் பேசுகையில், 'அனைவரும் ஹிந்தியில் பேச முயல வேண்டும்; ஹிந்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.