எனது தந்தையை ஏன் கொன்றீர்கள்? வைரலான கேரள மாணவியின் வீடியோ!

எனது தந்தையை ஏன் கொன்றீர்கள்? என கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எனது தந்தையை ஏன் கொன்றீர்கள்? வைரலான கேரள மாணவியின் வீடியோ!

திருவனந்தபுரம்: எனது தந்தையை ஏன் கொன்றீர்கள்? என கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் சமீபத்தில் இடதுசாரி கட்சிக்காரர்களால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சந்தோஷ்குமார். இவரது மகள் விஸ்மயா. பன்னிரண்டு வயதான விஸ்மயா எட்டாம் வகுப்பு மாணவி. இவர் சமீபத்தில்  கைகளில் தனது தந்தையின் மரணம் குறித்த கேள்விகளைத் தாங்கிய  அறிவிப்பு அட்டைகளை அடுத்தடுத்து  பிடித்து கொண்டு நின்றபடியான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த அட்டைகளில் அவர். “எனது தந்தை என் கனவுகளை நிறைவேற்ற விரும்பினார். ஆனால் ஒரே ஒரு இரவு எனது எல்லா கனவுகளையெல்லாம் அடித்துச்சென்றுவிட்டது. அவரை ஏன் கொன்றீர்கள்? அவர் செய்த ஒரே தவறு அவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யை ஆதரித்ததுதான்” ஆகிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

கார்கில் போரில் மரணித்த ராணுவ வீரர் ஒருவரின் மகளான, டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியைச் சேர்ந்த மாணவி குர்மீகர் கவுர் சமீபத்தில், 'தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை; போர்தான் கொன்றது' என்ற வாசகம் தாங்கிய அட்டையை கையில் ஏந்தியபடியான வீடியோ பதிவை சிறிது காலத்துக்கு முன் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

அதேபோல கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசை எதிர்க்க குர்மீகர் கவுரின் வழியில் எட்டாம் வகுப்பு மாணவி விஸ்மாயா களமிறங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com