சோலார் பேனல் ஊழல்: உம்மன் சாண்டி மீது விசாரணைக் கமிஷன் அமைத்த பினராயி விஜயன்

சோலார் பேனல் ஊழல் தொடர்பாக முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை விசாரணைக் கமிஷன் அமைத்தார்.
சோலார் பேனல் ஊழல்: உம்மன் சாண்டி மீது விசாரணைக் கமிஷன் அமைத்த பினராயி விஜயன்

கேரளாவில் கடந்த முறை நடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது சோலார் பேனல் ஊழல் விவகாரம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் சோலார் பேனல் அமைப்பது தொடர்பாக அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைத்து அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், கேரளாவில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சோலார் பேனல் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைத்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

கேரள அமைச்சரவையின் கூட்டம் திடீரென புதன்கிழமை கூடியது. இதில் இவ்விகாரம் தொடர்பாக அலோசிக்கப்பட்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

முன்னதாக அமைக்கப்பட்ட நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையிலான விசாரணைக் கமிஷன் சோலார் பேனல் ஊழல் தொடர்பாக செப்டம்பர் மாதம் அறிக்கையை சமர்பித்தது. எனவே இதன் அடிப்படையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், முதல்வராக இருந்த உம்மன் சாண்டி மற்றும் அவரது அலுவலக உதவியாளர்கள் ஜிக்குமோன் ஜோசப், டென்னி ஜொப்பன், சலீம் ராஜ், குருவில்லா உள்ளிட்டோர் சோலார் பேனல் அமைப்பது தொடர்பாக சரிதா நாயரிடம் லஞ்சம் பெற்றுள்ளனர். இவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

மேலும், இவ்விகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவுள்ளது. சிறப்பு புலனாய்வு அமைப்பானது ஆதாரங்களை அழிக்க முயன்றது, அதிகார துஷ்பிரயோகம், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்பைடியில் முன்னாள் உள்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 

அதுபோல, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் அரயந்தன் மொஹம்மது மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பென்னி பெஹன்னன், தமப்பனூர் ஆகியோர் மீதும் சோலார் பேனல் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com