அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்ய டிச., 31 கடைசி நாள்   

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்ய டிச., 31 கடைசி நாள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்ய டிச., 31 கடைசி நாள்   

புது தில்லி: அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்ய டிச., 31 கடைசி நாள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச நாட்டிலிருந்து சட்டத்துக்குப் புறம்பான முறையில் புலம் பெயர்ந்து, அஸ்ஸாமில் வசித்து வருபவர்களைக் கண்டறிய, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அஸ்ஸாம் குடிமக்களாக பெயர் சேர்க்கக் கோரி 3.29 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.89 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
37.59 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், 2.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் இறுதிசெய்யப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில், 40 லட்சத்துக்கும் அதிகமானோர் இறுதி வரைவு பட்டியலில் இருந்து விடுபட்டிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வந்தது.   புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: 

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்ய டிச., 15 என்று இருந்த கடைசி நாளானது, தற்போது டிச., 31 வரை நீட்டிக்கபப்டுகிறது. 

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் கருத்துகளையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியானது, பிப்ரவரி  1, 2019-இல் துவங்க வேண்டும். பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அதுகுறித்த விசாரணை துவங்க வேண்டும்.   

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.  

முன்னதாக நோட்டீஸ் அனுப்பும் பணியானது ஜனவரி 15 அன்று துவங்க வேண்டும் என்றும்,  பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அதுகுறித்த விசாரணை துவங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் அஸ்ஸாம் மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, இறுதித்தேதியானது ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com