வாக்கு சதவீதத்தை இழந்து, வெற்றிகரமான தோல்வி அடைந்த பாஜகவுக்கு இதுவும் வெற்றிதான்! 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிகரமான தோல்வி அடைந்தது எப்படி என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்.
வாக்கு சதவீதத்தை இழந்து, வெற்றிகரமான தோல்வி அடைந்த பாஜகவுக்கு இதுவும் வெற்றிதான்! 


குவகாத்தி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிகரமான தோல்வி அடைந்தது எப்படி என்று கேட்பவர்களுக்கு இதோ பதில்.

மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பாஜகவின் எண்ணம் ஈடேறியது. 

ஆனால், வட கிழக்கு மாநிலங்களில் இருந்து காங்கிரஸை வெளியேற்றிய பெருமையை தனக்கே உரித்தாக  வைத்துக் கொள்ள நினைத்த பாஜகவின் ஆசை மட்டும் பகல்கனவாகிவிட்டது.

வட இந்திய மாநிலங்களில் தற்போது ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் வெளியேறிவிட்டது. ஆனால், அந்த கடைசி மாநிலமான மிஸோரமில் பாஜகவுக்கு பதிலாக மிஸோ தேசிய முன்னணிக் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் வெற்றி வாய்ப்பை இழந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியுடன் பாஜகவும் சேர்ந்து கொண்டது.

ஆனால், மிஸோரமில் இதுவரை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியைக் கூட தொட்டுப் பார்க்காத பாஜக, முதல் முறையாக இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் தனது வெற்றி முத்திரையைப் பதித்துள்ளது. இதன் மூலம் மிஸோரம் சட்டப்பேரவைக்குள் பாஜக முதல் முறையாக நுழையப் போகிறது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக அது மறைமுகமாக சில வெற்றிகளைப் பெற்றே உள்ளது. அவற்றை பாஜக சற்று உற்று நோக்கினால், அடுத்து வரும் பேரவைத்  தேர்தல்களையும், பொதுத் தேர்தலில், பாஜக நுழைய முடியாத மாநிலங்களில் எப்படி நுழைவது என்பதையும் கற்றுக் கொள்ளலாம்.

தோல்விகளில் இருந்து மட்டுமல்ல.. இதுபோன்ற வெற்றிகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்ள முடியும் பாஜகவால்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர்,  அருணாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் பாஜக ஆட்சியும், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.

ஒரு காலத்தில் வடகிழக்கு இந்திய மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிபுரிந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி 2016ம் ஆண்டு தொடங்கியது. அஸ்ஸாமில் 15 ஆண்டு கால தருண் கோகோயின் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்து வட கிழக்கு இந்திய மாநிலங்களில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு தொடக்கப் புள்ளி வைத்தது. அதன்பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றிப் பாதையில் பாஜக முன்னேறியது. 

இதன் காரணமாக, மணிப்பூர், மேகாலயாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும், தனியாக ஆட்சியமைக்க முடியாமல் போனது.

எனவே, இதுவரை நுழையாத மிஸோரம் மாநிலத்தில் பாஜக நுழைந்ததே, ஒரு வெற்றிகரமான வெற்றிதானே.

வாக்கு சதவீதத்தை இழந்த பாஜக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com